அதிரடிப்படைக்கு போலீஸார் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

வீரப்பனைப் பிடிக்க 300க்கும் மேற்பட்ட இளம் போலீசாரைத் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. இந்தப்பணியில் மும்முரமாக ஐ.ஜி. விஜயகுமார் ஈடுபட்டுள்ளார்.

வீரப்பனைப் பிடிக்கும் பணியில் கர்நாடக அதிரடிப்படை, தமிழக அதிரடிப்படையின் கூட்டுத் தலைவராகத்தேவாரம் ஈடுபட்டுள்ளார். வீரப்பனைப் பிடிக்க தகுதியான போலீசாரைத் தேர்வு செய்யும் முதல் கட்டப் பணிஇப்போது துவங்கியுள்ளது.

இவர்களைத் தேர்வு செய்யும் பணி வரும் ஜூன் 21 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இளம்போலீசாருக்கு கடும் பயிற்சியும் காத்திருக்கிறது. மலை ஏற்றம் உள்பட காட்டுக்குள் வாழ அனைத்து வித்தைகளும்இவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

புதிய அதிரடிப்படைத்தலைவர் தேவாரம் பொறுப்பேற்றவுடன் வீரப்பனைப் பிடிக்க இந்த முறை புதிய யுக்திகையாளப்படும் என அறிவித்தார். இதன்படி தற்போது தகுதிவாய்ந்த ஆட்களைத் தேர்வு செய்யும் பணியில் ஐ.ஜிவிஜயகுமார் தேர்வில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே, அனைத்துப் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆர்வமுள்ள 30வயதிற்குட்பட்ட இளம் போலீசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பினை ஏற்று வீரப்பனைப்பிடிக்க விருப்பம் தெரிவித்த போலீசாரின் பட்டியல் தற்போது பரிசீலனையில் உள்ளது.

விருப்பம் தெரிவித்தோர் பட்டியலில் 300 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நேர்காணலுக்காகசத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் காமிற்கு அழைக்கப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஐ.ஜி விஜயகுமார் தீவிரம்காட்டி வருகிறார்.

தேர்வு செய்யப்படும் அனைவரும் உடனடியாக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு, விரைவில் காட்டுக்குள்அனுப்பப்படுவர்.

வீரப்பன் நடமாட்டம் இருந்ததாக கருதப்பட்ட கோவை மாவட்டப் பகுதிகளில் போலீஸ் கமிஷனர் நரேந்திபால்சிங் மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்கள் தங்கள் அறிக்கையை விஜயகுமாருக்குஅனுப்பி வைத்துள்ளனர்.

இதை அவர் கவனமுடன் பரிசீலனை செய்து வருகிறார். மேலும், வீரப்பனை சில அடி தூரத்தில் கோட்டைவிட்டதாகக் கூறிய வின்சென்ட் என்ற இன்ஸ்பெக்டரிம் தேவையான தகவல்களைத் திரட்ட விஜயகுமார் அவரைஅழைத்துள்ளார்.

வீரப்பனை வேவு பார்க்க உளவுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மலைப் பகுதியில் பயன்படுத்தும் வகையில் புதியரக பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் வயர்லஸ் கருவி உட்பட பல்வேறு நவீன அம்சங்கள்உள்ளன.

எனவே வரும் ஜூன் 21ம் தேதி முதல் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையினர் தீவிரம் காட்டுவர் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+