கணவரைப் பிரிந்து போலீஸ் ஸ்டேசனில் காதலனை கைப்பிடித்த காதலி
குளித்தலை:
திருமணமான 15 நாட்களில் கணவனை விட்டு விட்டு, தான் காதலித்தவனை போலீஸார் முன்னிலையில்கைப்பிடித்தாள் குளித்தலையைச் சேர்ந்த புதுமணப்பெண்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பங்களாப்புதூரைச் சேர்ந்தவர் நடராஜன் (25). அதே ஊரைச் சேர்ந்தவர்தனலட்சுமி (21). இவர் ராக்போர்டு நாகமாரியம்மன் சுய உதவி குழுவில் வேலை செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்தனர்.
இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனலட்சுமியை அவரதுபெற்றோர் நீலமேகம் என்ற வாலிபருக்குத் கட்டாயக் கல்யாணம் செய்து வைத்தனர்.
ஆனால் தான் காதலித்த நடராஜனை கைப்பிடிக்க முடியவில்லையே என்று வருந்திய தனலட்சுமி கடந்த 3நாட்களுக்கு முன் கணவன் வீட்டைவிட்டு ஓடினார்.
பின்னர் நேராகக் குளித்தலை போலீஸ் நிலையத்துக்குச் சென்றார்.
போலீஸாரிடம் தான் நடராஜன் என்பவரை கடந்த 4 வருடங்களாகக் காதலித்ததாகவும், தனது பெற்றோர்வேண்டுமென்றே வேறு ஒருவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும் புகார் கூறினார்.
தான் மீண்டும் காதலன் நடராஜனுடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார்நடராஜனை வரவழைத்தனர். அவரும் தனலட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.
இதையடுத்து போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
வாழ்த்தினார் எம்.எல்.ஏ:
போலீஸ் நிலையத்தில் இவர்களது திருமணம் நடந்த போது கரூர் அதிமுக எம்.எல்.ஏ. பாப்பாசுந்தரம் அங்குள்ளபயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அவர் புதுமணமக்கள் நடராஜன்-தனலட்சுமியை வாழ்த்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications