விசாரணைக் கைதி சாவு: 2 போலீசார் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி இறந்தது தொடர்பாக ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 2 போலீசார்"சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம், கிச்சிலிபாளையம் கஸ்தூரிபா நகரைச் சேர்ந்தவர் தில்லை என்ற தில்லைநாயகம் (35). இவர் மீது சேலம்டவுன் போலீசில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக சேலம் நீதிமன்றம்தில்லைநாயகத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து தில்லைநாயகத்தைக் கைது செய்து, போலீசார்நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், அவரது உடல் ஆனந்தா பாலம் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை அடித்துக்கொலை செய்திருக்கலாம் எனக் கருதிய கஸ்தூரிபா நகர் பொதுமக்கள் நேற்று சேலத்தில் திடீரென சாலைமறியலில்ஈடுபட்டனர்.

நான்கு மணி நேரம் இந்த சாலை மறியல் நீடித்தது. இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்சமாதானப்படுத்தினர். ஆனால், சாலைமறியல் தொடர்ந்து நடந்ததால், போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது.

பின்னர் போலீஸ் கமிஷனர் ராமநாதன், கவனக்குறைவாகப் பணியில் இருந்ததால் தில்லைநாயகம் இறந்துள்ளார்எனக் கருதி, டவுன்போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த எஸ்.ஐ.,காந்தி, போலீசார் சவுந்திரராஜன், கார்த்திகேயன்ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தில்லைநாயகம் இறந்ததற்கு போலீசார் தரப்பில் அளித்த விளக்கம் வருமாறு:

தில்லைநாயகத்திற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையொட்டி அவரை கைது செய்து ஜீப்பில் ஏற்றிவந்தோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய கொண்டு சென்றோம்.

ஆனால், வேறு ஒரு இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை லாக்கப்பில் வைத்து விட்டு பணியைக்கவனிக்கச் சென்றோம். பின்னர் சில மணி நேரத்திற்குப் பிறகு தில்லைநாயகத்தை ஆஜர் செய்ய அழைத்துச்சென்றோம்.

அப்போது அவர் தப்பி ஓடினார். காம்பவுண்ட் சுவரைத் தாண்ட அருகில் இருந்த மரத்தில் ஏறி குதித்தார். அப்போதுதவறி கீழே விழுந்தார். மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

மருத்துவமனையில், தில்லை நாயகம் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே, அவரது உடலைஉறவினர்களிடம் ஒப்படைக்க ஒரு வாடகை டாக்சியில் ஏற்றி வந்தோம். ஆனந்தா பாலம் அருகே வந்தபோதுடாக்சி பழுதடைந்து விட்டது. எனவே டாக்சி டிரைவர் உடலை இறக்கி விட்டு சென்று விட்டார்.

வேறு வண்டியை ஏற்பாடு செய்ய போலீசார் சென்று விட்டதால் தில்லையின் உடல் ஆனந்தாபாலத்திற்கு அருகில்இருந்தது எனத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+