அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு குறைவு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அமெரிக்க தூதரகத்தை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட பின்னும்,பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை என்று தூதரக செய்தித் தொடர்பாளர் புகார் கூறியுள்ளார்.

ஆனாலும், இந்திய அரசு விரைந்து பாதுகாப்பு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக, சர்வதேசத் தீவிரவாதிஒசாமா பின் லேடனின் கூட்டாளிகள் இருவர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் அமெரிக்க தூதரகத்திற்கு முன் கார் ஒன்றில் வெடிகுண்டை வெடிக்க வைத்து தூதரகத்தைதகர்க்க திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக கார் ஒன்றை அவர்கள் தேடிக் கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர்.

உளவுத்துறை அதிகாரிகள் உதவியுடன், டெல்லி சிறப்பு போலீஸ் படையினர் தீவிரவாதிகளின் இம்முயற்சியைமுறியடித்தனர்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பே அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என டெல்லிஉளவுத்துறையினருக்கும், போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போது தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது.

இவர்களை போலீசார் விசாரித்த போது, தாங்கள் அடிக்கடி டெல்லிக்கு வருவதாகவும், அப்போது தூதரகஅலுவலக ஏரியாவை தீவிரமாக கண்காணித்து வந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 1998ம் ஆண்டு கென்யா மற்றும் தான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரங்களில் குண்டுவெடிக்கச் செய்து, 200 பேரைக் கொன்றதற்காக அமெரிக்கப் போலீஸாரால் தேடப்பட்டு வருபவர் பின் லேடன்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+