பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் எச்.ஏ.எல். ஹெலிகாப்டர்
பாரிஸ்:
பிரான்சில் நடக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியில், இந்தியா சார்பாக எச்.ஏ.எல். மட்டும்தான் கலந்துகொள்கிறது.
பாரிஸ் அருகே லி போர்கட் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இந்தக் கண்காட்சியில் 1,800கம்பெனிகளைச் சேர்ந்த விமானங்கள் அணிவகுக்கின்றன.
இந்தியாவிலிருந்து, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்படும் எச்.ஏ.எல். தயாரிப்பான"அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர்" இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளது.
இந்திய விமானப் படை துணைத் தலைவர், பாதுகாப்பு உற்பத்திச் செயலாளர் மற்றும் சிவில் ஏவியேசன் செயலாளர்ஆகியோர் "லி போர்கட் கண்காட்சி"க்கு இந்தியா சார்பாக வந்துள்ளனர்.
உலகிலேயே பழமையான, பெரிய விமானக் கண்காட்சியாக "லி போர்கட் கண்காட்சி" கருதப்படுகிறது. 1909ல்தான்முதன் முதலில் "லி போர்கட் கண்காட்சி" நடத்தப்பட்டது. இது 44வது கண்காட்சியாகும்
அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்பட 43 நாடுகளைச் சேர்ந்த 242 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இங்குகாட்சிக்கு வைக்கப்படுகின்றன.
ரஷ்யாவின் சுகோய்-30எம்.கே. ரக விமானங்களும், பிரான்சின் டசால்ட் கம்பெனி தயாரிப்பான ரபேல் ரகவிமானங்களும், எப்-18 ரக விமானங்களும் இக்கண்காட்சியில் பறக்கவிருக்கின்றன. பிரம்மாண்டமான போயிங்737 விமானங்களின் லேட்டஸ்ட்டான போயிங் 737-900 விமானங்களும், ஏர்பஸ்களிலேயே பெரிதான ஏர்பஸ்340-600 விமானங்களும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கப் போகின்றன.
இதுபோக 66 ராணுவ ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் கூட கண்காட்சியில் சீறவுள்ளன.
சுமார் 2,70,000 பேர் கண்காட்சியைக் கண்டு ரசிக்கவுள்ளனர். 1999ல் நடந்த இதே "லி போர்கட் கண்காட்சி"யின்மூலம், 15 லட்சம் பிராங்க்குகளைச் சம்பாதித்த கையோடு, 1,500 பேருக்கு முழுநேர வேலையையும் போட்டுக்கொடுத்திருந்தது பிரான்ஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications