ஜூலை 14 ல் வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பு
டெல்லி:
இந்தியா வரும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் வரும் ஜூலை 14 ம் தேதி இந்திய பிரதமர் வாஜ்பாயைசந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முஷாரப் ஜூலை 14 ம் தேதி முதல் ஜூலை 16 ம் தேதி வரை வாஜ்பாய்மற்றும் பிற அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
கோவாவில் உள்ள பயணியர் விடுதி அல்லது முசெளரியில் உள்ள பயணியர் விடுதியில் இருவரும் சந்தித்துப்பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இருப்பினும், முஷாரப்பும், வாஜ்பாயும் எப்போது சந்தித்துப் பேசுவார்கள் என்பது குறித்து தெளிவான தகவல்கள்எதுவும் இல்லை.
முன்னதாக, காஷ்மீர் பிரச்சனை உள்பட இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயுள்ள பிரச்சனைகளைத்தீர்ப்பதற்காக இந்தியா வரும்படி, கடந்த மாதம் வாஜ்பாய், முஷாரப்புக்கு அழைப்பு விடுத்தார் என்பதுநினைவிருக்கலாம்.
மும்பையில் அறுவை சிகிச்சை பெற்று வரும் பிரதமர் வாஜ்பாய், விரைவில் இருவரும் சந்தித்துப் பேசும் நாள்குறித்து தெரிவிப்பார் என்று தெரிகிறது.
முஷாரப்பின் இந்திய வருகை குறித்து கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங், பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப், ஜனாதிபதி மாளிகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குவாரா?அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியா வந்திருந்த போதுஅவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications