அப்பா அடிப்பாரே .. 10 வயது சிறுமியின் பரிதாப முடிவு
சென்னை:
தங்கையை கீழே போட்டு அவள் காயமடைந்ததால், அப்பா அடிப்பாரே என்ற பயத்தில் 10 வயது சிறுமிதற்கொலை செய்து கொண்டாள்.
சென்னை அருகே இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. சென்னை அருகேயுள்ள போரூர் பகுதியைச் சேர்ந்தவர்சேகர். இவர் அப்பகுதியில் கொத்தனாராக இருந்து வருகிறார். இவருக்கு மொத்தம் 4 பிள்ளைகள். இவர்களில்மூத்த பெண் கவுதமி (10), கடைசிக் குழந்தையும் பெண்தான். அவளுக்கு ஒன்றரை வயதாகிறது.
சம்பவ தினத்தன்று கவுதமி, தனது தங்கையை தூக்கி வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது கீழேஇருந்த தங்கையை தூக்கிக் கொண்டு எழுந்தபோது கால் இடறி கீழே விழுந்தாள். இதில் கவுதமியின் தங்கையின்பல் உடைந்தது.
இருவரும் கீழே விழுந்த சப்தம் கேட்ட சேகரும், அவரது மனைவியும் ஓடி வந்தனர். சிறுமியின் பல் உடைந்ததைப்பார்த்த சேகர் கோபத்துடன் கவுதமியைக் கண்டித்துள்ளார். அடிக்கவும் கையை ஓங்கியுள்ளார். இதைப் பார்த்துப்பயந்த கவுதமி வீட்டிலிருந்து வெளியே ஓடி பக்கத்து வீடான தனது பாட்டி வீட்டுக்குப் போய் விட்டாள்.
இரவில் வீடு திரும்பினால் தந்தை அடிப்பாரே என்ற பயம் கவுதமிக்குள் எழுந்தது. அப்பாவின் அடியிலிருந்துதப்பிக்க தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற பரிதாபமான முடிவுக்கு வந்தாள் கவுதமி. இரவில் பாட்டிஉறங்கியதும் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டாள். தீயில் கருகியஅவளது அவலக் குரல் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்தனர்.
70 சதவீதத்திற்கும் மேலாக உடல் கருகிய நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கவுதமி கொண்டுசெல்லப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தாள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications