அரசியல் கட்சியாகிறது ப.சி.யின் ஜனநாயக பேரவை
கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை அரசியல் கட்சியாக மாற ஆதரவு அதிகரித்து வருகிறது என அதன்நிறுவனர் பா.சிதம்பரம் தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னை உட்பட 33 இடங்களில் கருத்தாய்வுக் கூட்டம் நடத்தி வருகிறேன். இதுவரை 13 மாவட்டங்களில்கருத்தாய்வுக் கூட்டம் நடத்தி முடித்துள்ளேன். அடுத்த மாதம் ஜூலை 15ம் தேதிக்குள் பேரவை கருத்தாய்வுக்கூட்டம் நடத்தி முடிக்கப்படும்.
பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற அதிகஅளவு ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த கருத்தாய்வுக் கூட்டம்முடிந்தபிறகு அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றி முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் எப்போதும் அலை வீசினால் ஒரே மாதிரியாக இருக்கும் .ஆதரவு அ-லை எனத் தேடும்போது திமுக,அதிமுக இரண்டு கட்சிகளைத்தவிர மாற்றுக் கட்சி எதுவும் இல்லை. எனவே, இதற்கு மாற்றாக 3வது அணியாககாங்கிரஸ் அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் இருந்தால் மகிழ்ச்சியே.
கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் உள்ள மாணவர்கள் பேரவைகளில் நான் பேச விரும்புகிறேன். அதற்கானவாய்ப்புகள் எனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வட்டி தள்ளுபடியைப் பொறுத்தவரை அபராத வட்டியை திமுக அரசு தள்ளுபடி செய்தது. இப்போது வட்டியைஅதிமுக தள்ளுபடி செய்தது. இதேபோல நிலவள வங்கி மற்றும் நெசவாளர்கள் கூட்டுறவு வங்கி ஆகியவற்றிலும்வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கஜானா காலியானது என்பது வெரும் கவர்ச்சியான வார்த்தையே. எந்த அரசு பற்றாக்குறையில்லாத பட்ஜெட்சமர்ப்பிக்கிறது?. எல்லாமே பற்றாக்குறையில் ஓடும்போது கஜானாவில் என்ன இருக்க போகிறது?
திருப்பூர் பனியன் தொழில் ஏற்றுமதிக்கு டியூட்டி டிராபேக் ஏன் எனக் குறைத்தார்கள் எனத் தெரியவில்லை. நான்டெல்லி செல்லும்போது நிதியமைச்சரைச் சந்தித்து இது குறித்து எடுத்துச் சொல்வேன் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications