கட்டை வண்டி விமானங்கள்
டெல்லி:
இந்திய உளவு விமானங்களுக்கு வயதாகிவிட்டதால், அவற்றின் செயல்திறன் குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய விமானங்கள் ஒலியின் வேகத்துக்கு இணையாக அதிவேகமாகப் பறக்கும் திறன் கொண்டவை. அதுமட்டுமல்ல, எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டத்தையும் அதிபுத்திசாலித்தனத்துடன் கண்டறியுமாம்.மேலும், இந்த உளவு விமானங்கள் 1 லட்சம் அடி உயரம் வரை சென்று பறக்க வல்லதாம்!
1981ல் வாங்கப்பட்ட மிக்-25ஆர் உளவு விமானங்களுக்கு 2001க்குள் ஆயுசு முடிவதாகச் சொல்கிறார்கள்.அதாவது 2001க்குள் இவற்றின் செயல்திறன் படிப்படியாகக் குறைய ஆரம்பித்து விடுமாம்! வயதாக வயதாக,மனிதர்கள் மட்டுமா, இந்த விமானங்களும் "வீக்"காகிக் கொண்டேதான் வரும். இத்தகைய விமானங்களிலுள்ளபெரும்பாலான உபகரணங்கள் ரொம்பவும் சுணங்கிப் போய் விட்டன என்று விமானப்படை பைலட்டுகள்ரொம்பவும் வருத்தப்படுகிறார்கள்.
இந்தியா வாங்கிய உளவு விமானங்களிலேயே, இந்த மிக்-25ஆர் விமானங்கள்தான் சூப்பர் என்று கூறப்படுகிறது.சோவியத் யூனியன் பல நாடுகளாகத் துண்டாவதற்கு முன்னரே நாம் இந்த வகை விமானங்களை வாங்கிவிட்டோம். அவ்வளவு நாளும் பழுதுபார்க்கும் பணியை சோவியத் யூனியன்தான், நம்முடைய "மிக்"விமானங்களுக்குச் செய்து வந்தது. ஆனால், தற்போதோ இவ்விமானங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள்கூட அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை.
மேலும், தற்போது ரஷ்யாவால் தயாரிக்கப்படும் "மிக்" ரக உளவு விமானங்களுக்கு "யானை விலை, குதிரை விலை"கூறுகிறார்களாம்! இவ்வளவு விலை கொடுத்து புதிய விமானங்களை வாங்குவதற்குப் பதில், பழைய"மிக்"குகளையே "ரிப்பேர்" செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியா முடிவெடுத்து விட்டது.
அதனால், இந்த மிக்-25ஆர் விமானங்களைப் பழுது பார்ப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில்அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்றழைக்கப்படும் எச்.ஏ.எல். கூட,இதற்கான புதிய தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது. மேலும், இரவில் போர் புரிவதற்கானவசதியையும் கூடுதலாக இந்த உளவு விமானங்களில் ஏற்படுத்தவுள்ளது எச்.ஏ.எல்.
எப்படியோ, நம் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்புத் துறைக்கே, கூடுதல் பாதுகாப்பைக் கொடுக்கும் விதமாக,விரைந்து புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, "மிக்" ரக விமானங்களைப் பழைய சுறுசுறுப்புடன் வானத்தில்பறக்கச் செய்து, உளவு பார்த்தால் சரி!
ஐ.ஏ.என்.எஸ்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications