இந்திய வீரர்கள் சுட்டு வங்கதேச விவசாயி சாவு: எல்லையில் பதட்டம்
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் கோட் பேஹார் மாவட்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் இந்திய- வங்கதேச எல்லையில்வங்கதேசத்தை சேர்ந்த விவசாயி இந்திய எல்லை காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்குபதட்டம் நிலவி வருகிறது.
தார்பரஹாத் - குச்லிபாரி மாவட்டங்களிலும், அதையொட்டி அமைந்திருக்கும் சர்வதேச எல்லைக் கோட்டுபகுதியிலும் பதட்டம் நிலவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய எல்லை பாதுகாப்ப்பு படையினர் (பி.எஸ்.எப்) வங்க தேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை திங்கள்கிழமைசுட்டுக் கொன்றனர். இதையடுத்து இந்திய-வங்க தேச எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.
இது குறித்து மேற்குவங்க மாநில டி.ஜி.பி. சயான் முகர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், வங்க தேசத்தை சேர்ந்த சிலர்இந்தியாவிற்குள் ஊடுறுவி இந்திய எல்லைக்குள் இருக்கும் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தொல்லைகொடுத்தனர். மேலும் அதை தடுக்க சென்ற பி.எஸ்.எப். வீரர்களையும் தாக்கினர்.
இதையடுத்து பி.எஸ்.எப். வீரர்கள் தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கி சூட்டில் வங்க தேசத்தை சேர்ந்த விவசாயிஒருவர் கொல்லப்பட்டார். இதனால் செவ்வாய்க்கிழமை இந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
ஆனாலும் உள்ளூர் போலீசார் எடுத்த நடவடிக்கையையடுத்து இந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக தேயிலை எஸ்டேட்டுக்குள் கூடுதல் படையினர்நிறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தினர் தாக்கியதில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த வியாழக்கிழமை கால்நடைகளை கடத்த முயன்ற வங்கதேசத்தவர்கள் மீது பி.எஸ்.எப். படையினர் துப்பாக்கிசூடு நடத்தியதில், வங்க தேசத்தை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். பி.எஸ்.எப்.வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 சம்பவங்களும் இந்திய-வங்கதேச அதிகாரிகள் எல்லை பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியைதீவிரப்படுத்த வேண்டும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய 1 வார காலத்திற்குள் நடந்துள்ளது.
கடந்த வாரம், இந்தியாவும், வங்க தேசமும் எல்லைப்பகுதியில் பிரச்சனைக்குரியதாக உள்ள 6.1 கிலோமீட்டர் தூரஎல்லைக் கோட்டில், இரு நாட்டினரும் எல்லை தாண்டாமல் இருப்பது குறித்து கண்காணிக்க இரு நாட்டைச் சேர்ந்தகூட்டுக்குழு அமைப்பது குறித்து முடிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஏப்ரல் மாதம் வங்க தேச ரைபிள்ஸ் படையினர் (பி.டி.ஆர்).பி.எஸ்.எப். முகாம் மீது தாக்குதல் நடத்தி,பி.எஸ்.எப். வீரர்களை கடத்திச் சென்று 16 பி.எஸ்.எப். வீரர்களை கொடூரமாக கொடுமைப்படுத்திக்கொன்றதிலிருந்தே இரு நாட்டிற்கும் இருந்து வந்த நல்லுறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications