இலங்கை அதிபர்-சகோதரர் அரசியல் மோதல் முற்றுகிறது
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராக இந்த வார இறுதியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற சபாநாயகரும், அதிபர் சந்திரிகாவின் சகோதரருமான அனுரா பண்டாரநாயகா எதிர்க்கட்சியானஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்.
அவரும், சந்திரிகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் முழுமூச்சாகஈடுபட்டுள்ளதால் இலங்கையில் சந்திரிகாவுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே அரசியல் மோதல் வலுக்கிறதுஎன்றே கூறலாம்.
இன்னொரு புறம், இலங்கையில் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும்இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தங்களது ஆதரவைவிலக்கிக் கொள்ளவும் தயாராக உள்ளனர்.
இலங்கை தலைமை நீதிபதி சரத் சில்வா மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள்குறித்து ஆளும் கட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அனுராபண்டாரநாயக்கா கோரி வருகிறார்.
கடந்த 6 ம் தேதி அவரது ஐக்கிய தேசிய கட்சி இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, நாடளுமன்றத்தில் கேள்விஎழுப்பியது. தலைமை நீதிபதி மேல் கூறப்பட்டுள்ள புகார் குறித்து கமிட்டி ஒன்றை அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவரது கட்சி கோரியது.
ஆனால், அதே நாளில் தலைமை நீதிபதி மேல் எழுப்பப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் குறித்துவிசாரணைக்கமிட்டி அமைக்கக் கூடாது என நாடாளுமன்ற சபாநாயகருக்கு (அனுரா பண்டாரநாயக்காவுக்கு) 3பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஐக்கிய தேசியக் கட்சி செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மக்களின் பல பிரச்சனைகளைத் தீர்வுசெய்ய மக்கள் கூட்டணி தவறிவிட்டது என்றும், அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்கொண்டு வரவுள்ளோம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications