தண்ணீர் லாரி மோதி 3 மாணவர்கள் சாவு
சென்னை:
சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் 3 மாணவர்கள் நசுங்கி இறந்தனர்.
சென்னையில் தண்ணீர் லாரிகள் மோதி விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதில் பலியானவர்கள்பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே. இந்நிலையில் திங்கள்கிழமை நடந்த ஒரு விபத்தில் ஒரே சைக்கிளில்சென்ற 3 மாணவர்கள் தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக இறந்தனர்.
சூளைமேடு பத்மநாபன் தெருவைச் சேர்ந்தவர்கள் பவானி குமார், கார்த்தி, பரமேஸ்வரன். மூவருக்கும் 12வயதாகிறது. இவர்கள் 3 பேருக்கும் 7ம் வகுப்பில் சேர வேறு பள்ளியில் இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து,நண்பர்களைப் பார்த்து விட்டு ஒரே சைக்கிளில் 3 பேரும் வந்து கொண்டிருந்தனர்.
சூளைமேடு அருகேயுள்ள கங்கை அம்மன் கோவில் சந்திப்பில் அவர்கள் வந்தபோது எதிரே வந்த தண்ணீர் ஏற்றிவந்த லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 மாணவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
சைக்களில் மோதிய வேகத்தில் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அப்பகுதியில் இருந்தபொதுமக்கள் லாரி டிரைவரை விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
3 மாணவர்கள் பரிதாபமாக தண்ணீர் லாரிக்குப் பலியானதால், சூளைமேடு பகுதியில் பரபரப்பு நிலவியது. தண்ணீர்லாரிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்றுபொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications