விலை போன தேர்வு முடிவுகள்: விசாரணைக்கு உத்தரவு
தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேர்வுத்துறை மூலம் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படுமுன்பே சேலம் பதிப்பைச் சேர்ந்த காலைப் பத்திரிக்கையிலும் ஒரு மாலைப் பத்திரிக்கையிலும்வெளியாகிவிட்டன.
பிற பத்திரிக்கைகளில் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே இவ்விரு பத்திரிக்கைகளிலும் முடிவுகள் வெளியாகிஉள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக கல்வித்துறை அமைச்சர் தம்பிதுரை உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இவ்விரு பத்திரிக்கை ஆசிரியர்களும் ஒரு நாளுக்குள் விளக்கம் அளிக்கும்படி,உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூன் 18 ம் தேதி காலை எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று மாநில கல்வித்துறை அதிகாரிபரமசிவம் அறிவித்திருந்தார்.
இதன்படி, அனைத்து பத்திரிக்கை, டிவி நிருபர்களும் திங்கள்கிழமை தேர்வுத்துறை அலுவலகம் முன்புகுவிந்திருந்தனர்.
ஆனால் அதற்கு முன்னதாகவே அதிகாலையிலேயே சேலத்தில் 2 பத்திரிக்கைகளில் விசேஷப் பதிப்புகளில் தேர்வுமுடிவுகள் வெளியாகிவிட்டன.
தேர்வுத்துறை இயக்குநரே அதிகாரப்பூர்வமாக தேர்வு முடிவுகளை அறிவிக்காத நிலையில், இவர்களுக்கு மட்டும்முடிவுகள் எப்படிக் கிடைத்தது என்பது மர்மமாக உள்ளது.
அனைத்து பத்திரிக்கை நிருபர்கள் முன்னிலையில் வெளியிடப்பட வேண்டிய தேர்வு முடிவுகள் எப்படி இந்த இருபத்திரிக்கை நிருபர்களுக்கு முன்னதாகவே கிடைத்தது? தேர்வுத்துறை இயக்குநர் முடிவு வெளியிடுவதற்குமுன்னதாகவே பத்திரிக்கைகளில் முடிவு எப்படி வெளியானது? தேர்வு துறை ஊழியர்கள் யாரேனும் விலைபோனார்களா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
தேர்வுத்துறை இயக்குநர் விளக்கம்:
இது குறித்து தேர்வுத்துறை இயக்குனரிடம் நிருபர்கள் கேட்டபோது, மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளைஉடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு வசதியாக தனியார் நிறுவனங்களின் இன்டர்நெட்டில் வெளியிட முடிவுசெய்தோம். அதே போல் இன்டர்நெட் நிருபர்களுக்கு சிடி பிளாப்பிகள் கொடுக்கப்பட்டது.
இந்த முடிவுகளை பிற்பகல் 12 மணிக்குத்தான் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால், அந்தநிறுவனங்கள் (இண்டியாஇன்போ அல்ல) அதைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அடுத்த வருடம் முதல்பத்திரிக்கைகளுக்குக் கொடுக்கப்படும்போது தான் இண்டர்நெட் நிறுவனங்களுக்கும் கொடுக்கப்படும் என்றார்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு முறைகேடுகள் குறித்துத் தெரிந்து கொண்ட கல்வி அமைச்சர் தம்பிதுரைவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விலைபோன தேர்வு முடிவுகள்:
தேர்வு முடிவுகள் 17 ம் தேதி இரவே விலைபோயுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தேர்வுத்துறை ஊழியர்கள் ஒருதேர்வு முடிவுக்கு ரூ.100 என்ற கணக்கில் பணம் வசூலித்துக் கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதில்மட்டும் லட்சக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த சில தினங்களிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications