அதிமுக கூட்டணியிலிருந்து விலகலா? ராமதாஸ் விளக்கம்
சென்னை:
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பிறகு அவரைச் சந்திக்காமல் இருந்து வந்த பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக திங்கள்கிழமை ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 20 இடங்களில் ஜெயித்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்ராமதாஸ், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்திக்காமல் இருந்துவந்தார்.
ஜெயலலிதாவுக்கும், ராமதாஸுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன. தேசியஜனநாயக முன்னணியில் சேர ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் திங்கள்கிழமை திடீரென தலைமைச் செயலகத்திற்கு வந்த ராமதாஸ் முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வரை சந்தித்ததில் எந்த விசேஷம்இல்லை. விவசாயிகளுக்கான கடன் தொகைக்கான வட்டியை ரத்து செய்ததை பாராட்டினேன்.
முதல்வர் கலந்து கொண்ட மூப்பனார் அளித்த விருந்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கானகாரணத்தை மூப்பனாருக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.
மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேர மாட்டோம். அதுதொடர்பான செய்திகளில்உண்மையில்லை என்றார் அவர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications