கி.வீரமணியை விசாரிக்க கோர்ட் உத்தரவு
சென்னை:
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணியிடம் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை ஜூலை19ம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை கோர்ட் சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்குஉத்தரவிட்டுள்ளது.
தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமிக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான தடா கைதிரவி என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்திருந்த போட்டோவும் பத்திரிகைகளில்வெளியானது. இவற்றை வீரமணி வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த போட்டோ போலியானது என்று பின்னர்தெரிய வந்தது.
இதையடுத்து வீரமணி மீது சுப்பிரமணியசுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கைஏற்ற உயர்நீதிமன்றம் வீரமணியை விசாரிக்க போலீஸுக்கு உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட் உத்தரவுப்படி வீரமணி மீது வழக்குத் தொடரப்படவில்லை. இந்த நிலையில் 18ம் தேதி மாலைக்குள்வீரமணி மீது வழக்குத் தொடராவிட்டால் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடருவேன் என்று சுவாமிஎச்சரிக்கை விடுத்திருந்தார். அவரது கெடுப்படி எதுவும் நடக்காததால், செவ்வாய்க்கிழமை சென்னை ஜார்ஜ் டவுன்மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி மனு கொடுத்தார்.
தனது மனுவில், தடா கைதி ரவி என்பரை சென்னை கோர்ட்டில் தி.கவினர் ஆஜர்படுத்தி அவருக்கும் எனக்கும்தொடர்பு இருப்பதாகவும், ரவி என் வீட்டிற்கு வந்தபோது எடுத்த போட்டோ என்று கூறி ஒரு போட்டோவையும்தாக்கல் செய்தனர். இதையடுத்து தடயவியல் துறையினர் போட்டோவைப் பரிசோதித்தபோது அது போலியானதுஎன்று தெரிய வந்தது.
இதையடுத்து தஞ்சாவூர் கோர்ட்டில் புகார் செய்து வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினேன். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜெயலலிதாவும், வீரமணியும் நெருங்கிய நண்பர்கள். என்னைப் பழி வாங்க வேண்டும் என்பதற்காக இருவரும்சேர்ந்து நடத்திய நாடகமே இது. எனவே இந்த விவகாரம் குறித்து வீரமணி, ஜெயலலிதா ஆகியோருடன்விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு கோர்ட்உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை ஏற்ற மாஜிஸ்திரேட் அலமேலு நடராஜன், புகார்தாரரின் மனு குறித்து தடா கைதி ரவி மற்றும் வீரமணிஆகியோரிடம் விசாரணை நடத்தி அடுத்த மாதம் 16ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications