டெல்லி திரும்பினார் வாஜ்பாய்
மும்பை:
மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் வாஜ்பாய்,செவ்வாய்க்கிழமை பிற்பகல் டெல்லி திரும்பினார்.
அவரை மராட்டிய கவர்னர் அலெக்சாண்டர், முதலமைச்சர் விலாஸராவ் தேஷ்முக் மற்றும் உயர் அதிகாரிகள்உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். பிற்பகல் 2.50 மணிக்குப் மும்பையிலிருந்து புறப்பட்டு டெல்லி வந்துசேர்ந்தார் பிரதமர்.
டெல்லி விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், உள்துறை அமைச்சர் அத்வானி, டெல்லி கவர்னர்விஜய்கபூர் மற்றும் பலர் பிரதமர் வாஜ்பாயை வரவேற்றனர்.
முன்னதாக, கடந்த ஜூன் 6 ம் தேதி மூட்டு வலி காரணமாக மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் வாஜ்பாய். அவருக்கு ஜூன் 7 ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவைசிகிச்சையை நியுயார்க் டாக்டர் சித்ரஞ்சன் ரனவத்தே தலைமையிலான டாக்டர்கள் குழு செய்தது. அறுவைசிகிச்சைக்குப்பிறகு பிரதமர் வாஜ்பாய் 12 நாட்கள் அதே மருத்துவமனையில் ஓய்வெடுத்தார். அவருக்குத்தொடர்ந்து 6 மாதங்கள் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தற்போது வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிரதமர் வாஜ்பாய் கடந்த வருடம்அக்டோபர் மாதம் இடது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications