அதிரடிப்படையில் புதிய இளம் போலீஸார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையில் துடிப்புமிக்க, இளம் போலீஸார் புதிதாகசேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அதிரடிப்படை புதிய பொலிவுடன் திகழ்கிறது.
வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையின் புதிய தேடுதல் வேட்டை வியாழக்கிழமை முதல் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் தொடங்குகிறது.
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றவுடன் அதிரடிப்படைக்கு புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது. அதிரடிப்படையின்தலைவராக முன்னாள் டி.ஜி.பி. தேவாரமும், அவருக்குத் துணையாக ஐ.ஜி.விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையிலும் பல போலீஸார் நீக்கப்பட்டு புதிதாக பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். துடிப்புமிக்க, இளம்போலீஸார் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், அதிரடிப்படை புதிய பொலிவுடன் திகழ்கிறது.
தமிழக அதிரடிப்படை வீரர்களுடன், கர்நாடக அதிரடிப்படை வீரர்களும் இணைந்து வீரப்பன் வேட்டையில்ஈடுபடுவர்.
அவர்களுக்கு பழைய துப்பாக்கிகளுக்குப் பதில், புதிதாக அதிநவீனத் துப்பாக்கிகள் தரப்பட்டுள்ளன.கண்ணிவெடிகளைக் கண்டறியும் கருவிகள், வெகு தூரத்திலும் பார்க்கக் கூடிய நவீன பைனாகுலர்கள்ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது சத்தியமங்கலம் பகுதியில்தான் வீரப்பன் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.இதையடுத்தே அப்பகுதியில் இருந்து தேடுதல் வேட்டையைத் துவக்க அதிரடிப்படையினர் முடிவு செய்துள்ளனர்.
வீரப்பனுக்கும் கூடுதல் பலம்?
இந்நிலையில், வீரப்பனும் கூடுதல் ஆயுத பலத்தோடு விளங்குவதாகக் கூறப்படுகிறது. நவீன ஆயுதங்களையும்வீரப்பனின் ஆட்கள் வைத்துள்ளனர் என்று அதிரடிப்படைக்குத் தகவல் கிடைத்துள்ளதாம்.
இதுபோக, வீரப்பனிடம் தற்போது ஆள்பலமும் அதிகரித்து விட்டது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள்கூறுகின்றன.
தமிழர் மீட்சிப்படை என்ற இயக்கம் வீரப்பனின் மாஸ்டர் பிரெய்னாகச் செயல்பட்டது அனைவருக்கும் தெரியும்.இந்த இயக்கத்தின் தலைவர் மாறன் கைதானதைத் தொடர்ந்து, வீரப்பனின் ஆட்கள் குறைந்து விட்டதாகஅனைவரும் தப்புக் கணக்குப் போட்டுள்ளனர்.
ஆனால், மீட்சிப்படையைச் சேர்ந்த மேலும் 10 பேர் தற்போது வீரப்பனுக்குத் தோள் கொடுக்க காட்டுக்குள்சென்றுள்ளதாகத் தெரிகிறது. இவர்கள்தான் வீரப்பனுக்கு நவீன ஆயுதங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும்கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications