கருணாநிதி கல்வெட்டு இடிப்பு..திமுகவினர் சாலை மறியல்
மதுரை:
மதுரை கோட்ஸ் பாலத்தில் இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் பொறித்த கல்வெட்டு தூண்அகற்றப்பட்டது.
இதையடுத்து திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மதுரை கோட்ஸ் மில் அருகேயுள்ள மேம்பாலம் அருகேமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது.
கல்வெட்டுடன் கூடிய இந்தத் தூணை மாநகராட்சி ஊழியர்கள் முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தினர்.இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவினர் மறியல்:
கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அகற்றப்பட்டதும், மதுரை நகர திமுக செயலாளர் வேலுச்சாமிஅங்கு வந்தார்.
அவரது தலைமையில் அங்கு கூடிய திமுகவினர் கல்வெட்டு தூணை இடித்ததை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக போலீஸாரும், மாநகராட்சி ஊழியர்களும் திமுகவினரிடம் பேசி சமாதானப்படுத்தினர். மீண்டும்அங்கு கல்வெட்டுத் தூண் அமைக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து திமுகவினர் மறியலைக் கைவிட்டனர். திமுகவினர் மறியல் செய்ததால் அப்பகுதியில் சிலமணிநேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திட்டமிட்டு இடிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் செய்த சதி.கல்வெட்டுடன் கூடிய தூணை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் போராடினர்.
மேயர் பார்வையிட்டார்:
கல்வெட்டு இடிப்பு பிரச்சனையால் மதுரை மேயர் குழந்தைவேலு அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார்.அவர் கூறுகையில், பாலத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு தூண் இடிக்கப்படுவதாகக் கிடைத்ததகவலையடுத்து மாநகராட்சி என்ஜினியருடன் அங்கு சென்று பார்வையிட்டோம்.
சில தினங்களுக்கு முன் பேராசிரியர் ஒருவர் பாலத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள தூண்ஆடிக்கொண்டிருப்பதாகவும், அதை சீர்செய்ய வேண்டும் என்று கூறினார். அதனால்தான் அந்தத் தூண்இடிக்கப்பட்டது. வரும் 24 ம் தேதிக்குள் கல்வெட்டு பதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications