த.மா.கா. நிர்வாகிகளுக்கு கல்தா
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைக்கப்படுவதாக அக்கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமைசத்தியமூர்த்தி பவனில் நடந்தது. கட்சித் தலைவர் மூப்பனார் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். கட்சியின் முக்கியநிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாநில அளவில் உள்ள அனைத்து அமைப்புகளும் கலைக்கப்படுவதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கலைக்கப்பட்ட அமைப்புகளுக்கான புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான அதிகாரம்கட்சித் தலைவர் மூப்பனாருக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு நன்றிகூறியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அதிருப்தி தெரிவித்து அந்ததந்த மாவட்டநிர்வாகிகள் சிலர் புகார் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டநிர்வாகிகள் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மீது புகார் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
