இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே மேலும்2 பஸ்கள்
டெல்லி:
டெல்லியிலிருந்து லாகூருக்கு மேலும் 2 பஸ்கள் இயக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துக்கழக நிர்வாகஇயக்குநர் ராகேஷ் மேத்தா தெரிவித்தார்.
ஆகஸ்டுக்குள் இந்த 2 பஸ்களும் தயாராகிவிடுமாம். ஏற்கனவே 2 பஸ்கள் லாகூருக்கு ஓடிக் கொண்டுதான்இருக்கின்றன. வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்களில்தான் இந்த 2 பஸ்களும் லாகூருக்குப்பயணம் செய்கின்றன.
இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, பிப்ரவரி 1999ல் முதன் முதலாகபிரதமர் வாஜ்பாய்தான் டெல்லியிலிருந்து லாகூருக்கு பஸ் பயணத்தைத் துவக்கி வைத்தார். அதோடு அந்த முதல்பஸ்ஸிலேயே லாகூருக்குச் சென்று, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்து, "ஹாய்"சொல்லிவிட்டு வந்தார் வாஜ்பாய்.
இடையிடையே காஷ்மீர் தீவிரவாதிகள் மிரட்டியும் உருட்டியும், இந்த பஸ் போக்குவரத்தைத் தடுக்க முயற்சித்தனர்.ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பலத்த பாதுகாப்புடன் இன்னும் பஸ் ஓடிக் கொண்டுதான்இருக்கிறது.
டெல்லியில் ஏறினால் 12 மணி நேரத்தில் லாகூரைச் சென்றடையும் இந்த "குளுகுளு" பஸ்ஸில் பயணம் செய்யரூ.800 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 1999-லிருந்து இதுவரை இந்த 2 பஸ்களும் 15,000 "டிரிப்"புகள்அடித்துள்ளன.
பாகிஸ்தானும் சும்மா இருந்து விடவில்லை. அதுவும் தன் பங்கிற்கு, இது போலவே, வாரத்திற்கு 2 பஸ்களை, 4நாட்கள் லாகூரிலிருந்து டெல்லிக்கு இயக்கிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் சுற்றுலா வளர்ச்சித் துறைதான் இந்தஏற்பாட்டைச் செய்துள்ளது.
லாகூரிலிருந்து கிளம்பும் பஸ், இந்திய எல்லையைத் தொட்டதும், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவிலிருந்துவரும் போலீஸார் இந்தப் பஸ்ஸில் ஏறுவார்கள். முழுப் பாதுகாப்புடன் பயணிகளை டெல்லியில் இறக்கினால்தான்இவர்களுக்கும் நிம்மதி.
தற்போது இந்த பஸ் போக்குவரத்து ரொம்பவும் பேமஸாகிவிட்டது. இப்படி 2 நாடுகளுக்கும் பஸ் போக்குவரத்துநடப்பதால், 2 நாட்டுப் பயணிகளும் சந்தோஷமாக உள்ளனர்.
இந்நிலையில்தான், மேலும் 2 பஸ்களை டெல்லி டூ லாகூருக்கு விடப்போவதாக டெல்லி போக்குவரத்துக் கழகம்கூறியுள்ளது. மேலும், வாரத்திற்கு 4 நாள் என்பதற்குப் பதில், வாரம் முழுவதும் பஸ்களை 2 மார்க்கத்திலும்இயக்குவதற்கு 2 நாடுகளுமே யோசித்து வருகின்றனவாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications