அரசுத் தொட்டில்களால் உயிர் பிழைக்கும் பெண் குழந்தைகள்
சென்னை:
மீண்டும் தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் பெண் சிசுக் கொலையை தடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.
1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பெண் சிசுக் கொலையை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது.தொட்டில் குழந்தை திட்டம். அரசியல் காரணமாக கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் இத் திட்டம் கைவிடப்பட்டது.
இப்போது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மதுரையைச் சுற்றிய உசிலம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு அருகிலிருக்கும்கிராமங்களில் பெண் சிசுக்கள் கொலை செய்யப்பட்டு வந்தன. இதை தடுத்து பெண் சிசுக்களை காக்கும் விதமாக தொட்டில்குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன்படி பெண் குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது எனக் கருதும் பெற்றோர் அக் குழந்தைகைளக் கொன்றுவிடாமல்அரசிடம் ஒப்படைத்துவிடலாம். இதற்கான மையங்களில் உள்ள தொட்டில்களில் அக் குழந்தைகளைப் போட்டுவிடலாம்.
அந்தக் குழந்தைகைள அரேச தத்தெடுத்து வளர்க்கும். படிக்க வைக்கும்.
ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 300 குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர்.
சமீபத்தில் இத் திட்டத்தின் கீழ் 2 பெண் குழந்தைகள் தமிழக அரசால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த குழந்தைகளைவாரியணைத்து முத்தமிட்ட ஜெயலலிதா அவைகளுக்கு சந்திரா. சித்ரா என பெயரிட்டார். அந்த குழந்தைகளுக்கு புதியஉடைகளையும் அளித்தார்.
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் பெற்றோர்களால் கைவிடப்பட்ட 50 குழந்தைகளை வளர்த்து வந்தது. இவற்றில் 20குழந்தைகளின் உடல் நிலை மிக மோசமானதையடுத்து அவர்களை அரசிடம் சமர்பித்தனர். ஆனால், உடல் நிலை மிகமோசமானதையடுத்து இருந்ததால் அவற்றை காப்பற்ற முடியவில்லை. அவை இறந்து போய்விட்டன.
மீதமிருந்த 30 குழந்தைகள் அரசால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த குழந்தைகள் எல்லாம் கிராமப்புறங்களில்மருத்துவமனைகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டில்களில் பெற்றோர்களால் போடப்பட்டவை.
1991ம் ஆண்டு தமிழக அரசால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் 12 பெண் குழந்தைகளை சமூகநலத்துறையினர் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்த பெண் குழந்தைகள் பல்வேறு பள்ளிகளிலும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயலலிதா சாக்லேட் கொடுத்துமகிழ்வித்தார். அந்த குழந்தைகளிடம் ஆதரவாகவும் பேசினார். பொறுப்பானவர்களாக உருவாக வேண்டும் எனவும் அறிவுரைகூறினார்.
இது மட்டுமின்றி சமீபத்தில் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளையும் சென்னை தலைமைச் செயலகத்திற்குவரவழைத்து அவர்களை வாழ்த்தினார் ஜெயலலிதா.மாணவிகள் விருப்பப்படி அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாகபுகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ரேங்கில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவி குறித்த நேரத்திற்கு வரமுடியாததால் ஜெயலலிதாவுடன் புகைப்படம் எடுத்துகொள்ளாததற்காக அழுது கொண்டிருந்த காட்சியும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. அதன் பின் அந்த மாணவியுடனும்ஜெயலலிதா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதன்மூலம் பெண் குழந்தைகள், மகளிர் முன்னேற்றத்தில் ஜெயலலிதா சிறப்பு கவனம் செலுத்தி வருவது தெரியவருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications