சத்துணவில் முட்டைக்கு பதில் பால் வழங்க அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சத்துணவுத் திட்டதின் கீழ் தற்போது முட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக பால்வழங்கலாமா என்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியருக்கு வாரத்திற்கு 2 நாட்கள் முட்டைவழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்தார்.

சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்பட்டுவந்ததால் நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் கோழிப்பண்ணைவைத்திருப்பவர்கள் பெரிதும் பலனடைந்தனர்.

இந்நிலையில் சத்துணவில் முட்டைக்கு பதிலாக பால் வழங்கலாமா என்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்துவருகிறது. இதற்கான உத்தரவும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகளுக்கு பால் பவுடராக சப்ளை செய்து, அதை சுடுநீரில் கரைத்து .சத்துணவு சாப்பிடும் சிறுவர், சிறுமியருக்குகொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கருணாநிதி கொண்டு வந்த திட்டம்என்பதால் முட்டை வழங்குவதை நிறுத்தக் கூடாது.

இந்த திட்டம் மாற்றப்பட்டால் இதுவரை முட்டை சப்ளை செய்து வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனகோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் கூறியுள்ளனர்.

பால்பவுடராக சப்ளை செய்யப்பட்டால் கூட அது உரியமுறையில் குழந்தைகளை சென்றடையாது. அதிலும்முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.

பால்பவுடரில் சரியான அளவு தண்ணீர் கலக்கப்படாவிட்டால் பால் தண்ணிப்பாலாகும் வாய்ப்பும் உள்ளது. பால்விலை முட்டை விலையைவிட அதிகமானது.

முட்டை வழங்கும் போது விலை நிர்ணயம் செய்வதிலும், வாங்குவதிலும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.முட்டைக்குள் எந்த முறைகேடு செய்யும் வாய்ப்பும் கிடையாது.

ஆனால் ஆவின் பால் சப்ளை செய்தால் கூட பாலின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியாது என கூறப்படுகிறது.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்த திட்டத்தின் வெற்றி அரசு அதை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதைபொறுத்துதான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+