விம்பிள்டனில் நுழையும் முதல் இளம் இந்திய வீராங்கனை
ஹைதராபாத்:
ஆந்திராவைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஜுனியர் விம்பிள்டன் போட்டியில்விளையாடும் வாய்ப்பை மெயின்டிரா மூலம் பெற்றுள்ளார்.
இதன் மூலம் மிக இளம் வயதிலேயே விம்பிள்டன் போட்டியில் மெயின்டிரா முலம் தகுதி பெற்று விளையாடும்முதல் இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சானியா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வயது 18. இவருக்கு கிராண்ட் ஸ்லாம் போட்டியானவிம்பள்டனில் மெயின் டிரா மூலம் விளையாட விம்பிள்டன் 2001 கமிட்டி அனுமதி அளித்துள்ளது.
உலக டென்னிஸ் ராங்கிங்கில் 18க்கு வயதுக்கு உள்பட்ட ஜுனியர் டென்னிஸ் போட்டியில் சானியா 57வதுஇடத்தில் இருக்கிறார். இவர் விம்பிள்டன் தகுதிச் சுற்றில் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் மெயின்டிராவின் மூலம் நேரடியாக விம்பிள்டன் போட்டியில் விளையாடஅனுமதிக்கப்பட்டுள்ளார்.
சானியா தான் விம்பிள்டன் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தியை தனதுதந்தைக்கு லண்டனிலிருந்து தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
இது குறித்து சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், சானியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதுமகிழ்ச்சி அளிக்கிறது. சானியா நிச்சயம் வெற்றியடைவார். ஏனென்றால் இந்த வருடம் அவர் 6 சர்வதேச டென்னிஸ்ஜுனியர் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்றார். இதே கருத்தையே சானியாவின் பயிற்சியார் பர்வீன்பார்கவாவும் தெரிவித்தார்.
சானியாவிற்கான லண்டன் பயணச்செலவுகளை ஜி.வி.கே. குரூப் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. சானியா முதல்போட்டியை ஜுலை மாதம் 1ம் தேதி விளையாடுவார். தகுதிச் சுற்றுகள் இந்த மாதம் 28ம் தேதி துவங்குகிறது.
விம்பிள்டன் போட்டிகளுக்கு முன் குவீன்ஸ் கிளப்பில் நடைபெறும் போட்டிகளிலும் சானியா விளையாடுகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications