வீரப்பனை தனிமைப்படுத்த அதிரடிப்படை முயற்சி
ஈரோடு:
வீரப்பனைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம். எங்களது தற்போதைய செயல்பாடுகள்அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என ஐ.ஜி விஜயகுமார் தெரிவித்தார்.
வீரப்பனைத் தேடும் பணி வியாழக்கிழமை முதல் துவங்கியது. இந்த பணியில் அதிரடிப்படையின்ஐ.ஜி.,விஜயகுமார் கடம்பூர் பகுதியில் நுழைந்தார். இவர் கடம்பூர் முகாமிலிருந்து புறப்படும்போது வீரப்பன்குறித்த நடவடிக்கைகள் குறித்து அளித்த பேட்டியில்,
வீரப்பன் நடவடிக்கை குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது. தேடுதல் வேட்டையில் ஏற்படும்முன்னேற்றம் குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்போம். இப்போது எல்லமே ரகசியம் தான் என பதிலளித்தார்.
சந்தன வீரப்பனைப் பிடிக்கும் பணியில் சத்தியமங்கலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடம்பூர்மலைப் பகுதியிலிருந்து விஜயகுமார் தனது பணியைத் தொடங்கினார். இவுரது தலைமையில் ஒரு குழுவும், எஸ்.பி.,தமிழ்ச் செல்வன் தலைமையில் ஒரு குழுவும் வீரப்பனைத் தேடும் பணியைத் தொடங்கின. 16 குழுக்களாகஅதிரடிப்படையினர் தற்போது காட்டுக்குள் முற்றுகையிட்டுள்ளனர்.
ஒரு பிரிவைச் சேர்ந்த அதிரடிப்படை வீரர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேவைப் படும்இடங்களுக்கு எந்த நேரத்திலும் அழைக்கப்படலாம். இந்த முகாம் வீரர்கள் 24 மணி நேரம் தயார் நிலையில்உள்ளனர்.
இந்த நிலையில் காட்டுப் பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.பண்ணாரி, கடம்பூர், அந்தியூர், பர்கூர், சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்ககை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications