விடுதலை சிறுத்தைகள் வன்முறை: அரசு பஸ்கள் எரிப்பு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான திருமாவளவனை விடுதலை செய்யக்கோரி அந்த அமைபினர்ஞாயிற்றுக்கிழமை நடத்திய சாலை மறியல், கல்வீச்சு சம்பவங்களால் பல கிரமாங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் முடக்கத்தான் பாண்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் பந்த் மற்றும் போராட்டம் நடத்ததிட்டமிட்டிருந்தார்.

இந்த போராட்டங்கள் சென்ற 21ம் தேதி நடைபெறுவதாக இருநத்து. ஆனால் அதற்கு முதல்நாளே திருமாவளவன்முன்னெச்சரிக்கை நடவடிக்கயாைக அவர் கைது செய்யப்பட்டார்.

திருமவளவனை விடுதலை செய்யக்கோரி அந்த அமைப்பின் தொண்டர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பஸ் எரிப்பு சம்பவங்களிலும், கல்வீச்சு சம்பவங்களிலும் ஈடுப்பட்டதுதொடர்பாக 100க்கும் அதிகமான விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்த பேருந்தை நிறுத்தி அதிலிருந்த பயணிகளைஒரு கும்பல்இறக்கிவிட்டுவிட்டு அந்த பேருந்துக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்துக்கு தீ வைத்தது தொடர்பாக 22 பேரைகைது செய்தனர்.

இதே போல் அந்த வழியே ஸ்கூட்டரில் வந்தவரை இறங்கச் சொல்லி அந்த ஸ்கூட்டரையும் தீ வைத்து எரித்தனர்.சென்னையிலிருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த 2 அரசு பேருந்துகளும் கல் வீசி தாக்கப்பட்டன.

தருமபுரி, அரூர் ஆகிய இடங்களிலும் இதே போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்த தொடர் தாக்குதல் காரணமாகபல இடங்களுக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வன்முறை சம்பவங்கள் நடந்த இடங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+