தமிழக போலீஸ் டி.ஜி.பி. அதிரடி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகப் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த ராஜகோபாலன் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, ஏ. ரவீந்திரநாத் ஐ.பி.எஸ். புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை,தமிழ்நாடு போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் தலைவராக இருந்தார்.
டி.ஜி.பி. பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ராஜகோபாலன், இப்போது போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.
வேண்டாத உயர் போலீஸ் அதிகாரிகளை தூக்கி எறியும் இடமாக, போலீஸ் பயிற்சிக் கல்லூரி தலைவர் பதவிமாறி வருகிறது. கடந்த முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, அப்போது டி.ஜி.பி.யாக இருந்த தேவாரத்தை,போலீஸ் பயிற்சிக் கல்லூரிக்குத் தூக்கி எறிந்தார் கருணாநிதி.
அதே முறையைப் பின்பற்றி, கருணாநிதி நியமித்த டி.ஜி.பியான ராஜகோபாலனை போலீஸ் பயிற்சிக் கல்லூரிக்குஅனுப்பியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications