பாண்டிச்சேரி விடுதலை சிறுத்தைகள் பந்த்திற்கு ஓரளவு ஆதரவு
பாண்டிச்சேரி:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான திருமாவளவனை விடுவிக்கக்கோரி விடுதலைசிறுத்தை அமைப்பினரும், எதிர்க்கட்சியினரும் திங்கள்கிழமை பாண்டிச்சேரியில் நடத்திய பந்திற்கு ஓரளவு ஆதரவுகாணப்பட்டது.
இந்த அமைப்பின் மாநில பொருளாளர் முடக்கத்தான் பாண்டி சில தினங்களுக்கு முன் மதுரையில் படுகொலைசெயய்யப்பட்டார்.
இக்கொலைச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால் பந்த் நடத்தப்படுவதாகஅறிவித்திருந்ததற்கு முதல் நாளே முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அவர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த 4 நாட்களாக விடுதலை சிறுத்தை அமைப்பினர் தமிழகத்தின் பலபகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஸ்கள் மீது கற்களை வீசியும், அவற்றுக்குத் தீ வைத்தும்வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் திங்கள்கிழமை பாண்டிச்சேரியில் நடத்திய பந்த்திற்கு ஓரளவு ஆதரவுதான்கிடைத்தது. பஸ்கள், டாக்சி மற்றும் அனைத்து வாகனங்களும் காலை முதலே இயங்கவில்லை. ஆனாலும் போலீஸ்காவலுடன் பாண்டிச்சேரி அரசு பஸ்களும், சில தனியார் பஸ்களும், ஆட்டோ ரிக்ஷாக்களும் நண்பகல் 12 மணிமுதல் இயங்க ஆரம்பித்தன.
இருப்பினும், தமிழக அரசு பஸ்கள் எதுவும் பாண்டிச்சேரிக்கு வரவில்லை. அனைத்துக் கடைகளும், வர்த்தகநிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தனியார், அரசு அலுவலகங்களுக்கும், ஜவுளி நூற்பாலைகளுக்கும் குறைவானவர்களே பணிக்கு வந்திருந்தார்கள்.
சட்டம்--ஒழுங்கு நிலையைப் பாதுகாக்க போலீசார் விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தனர். முன்னெச்செரிக்கைநடவடிக்கையாக 150 விடுதலைச் சிறுத்தை அமைப்பு தொண்டர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications