ரயில் விபத்து: விசாரணை ஆரம்பம்
சென்னை:
கோழிக்கோடு அருகே கடலுண்டி ஆற்றுப் பாலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையை ரயில்வே பாதுகாப்புஆணையர் திங்கள்கிழமை தொடங்கிவிட்டதாக என்று மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ரயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறும்.இந்த விசாரணையின் அறிக்கை ஒரு வாரத்திற்குள் தயாராகி விடும். அதற்குப் பின்னர், ரயில் பாதுகாப்புத் தலைமை ஆணையரும்இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவுள்ளார்.
இந்த விபத்துக்கு யாராவது காரணமாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
உடைந்து போன இந்தப் பாலம் விரைவில் சீரமைக்கப்பட்டு விடும். கண்ணா கமிஷன் அறிக்கையின்படி, நாட்டில் இன்னும் 14ரயில் பாலங்கள் இன்னும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளன.
விபத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை பற்றிய குழப்பம் இன்னும் நிலவுகிறது. சில உடல்கள் 2 தடவை எண்ணப்பட்டதும்இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்று தெரிகிறது. ஆனாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 54க்குள்தான் இருக்கும் என்றார்நிதிஷ்குமார்.
இதற்கிடையே, இந்த ரயில் விபத்து பற்றிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேரள சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன் என்று கோரியுள்ளார்.
யு.என்.ஐ
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications