மேலும் ஒரு அமைச்சரின் பதவி பறிப்பு: வளர்மதி ஜெபராஜ் அமைச்சரானார்
சென்னை:
தனது அமைச்சரவையிலிருந்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வெங்கடாச்சலத்தைமுதலமைச்சர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
இவருக்குப் பதிலாக மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வளர்மதி ஜெபராஜ் பிற்பட்டோர்நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தபி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை சட்டசபைத் தேர்தலில் தோற்கடித்தவர்.
செவ்வாய்க்கிழமை காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் பாத்திமா பீவியை ராஜ்பவனுக்குச் சென்றுசந்தித்தார். அப்போது அவரிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வெங்கடாசலத்தை நீக்கவும் வளர்மதிஜெபராஜை அமைச்சராக நியமிப்பதற்கும் ஒப்புதல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவும், கவர்னர் பாத்திமா பீவியும் சுமார் 30 நிமிடங்கள் பேசினர்.
ராஜ்பவன் வெளியே ஏராளமான நிருபர்கள் காத்திருந்தனர். ஆனால் ஜெயலலிதா இந்த சந்திப்பு குறித்துநிருபர்களிடம் எதுவும் பேசவில்லை.
முன்னதாக, திங்கள்கிழமை மாலை நடந்த அதிமுக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்குறித்து ஜெயலலிதா, கவர்னரிடம் தெரிவித்திருப்பார் என்று நம்பப்படுகிறது.
தமிழக மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து கவர்னரிடம் செவ்வாய்க்கிழமைதெரிவிக்கவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த ஜூன் 9ம் தேதிதான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் அய்யாறு வாண்டையார், தொழில்துறை அமைச்சர்பொள்ளாச்சி ஜெயராம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன.
இவர்களுக்குப் பதிலாக நாகப்பட்டினம் ஜீவானந்தம், உடுமலைப்பேட்டை சி. சண்முகவேலு, ஒரத்தநாடுவைத்திலிங்கம் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ஆட்சிக்குவந்து 44 நாட்களில் 4 அமைச்சர்கள் பதவி இழந்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications