56 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 56 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திங்கள்கிழமை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 வாரங்களாகச் "சும்மா" இருந்த பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் தற்போது பணிமாற்ற உத்தரவுகிடைத்துள்ளது.

சுற்றுலாத்துறை ஆணையாளராக இருந்த சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர். காசிநாதன், தற்போது கலைமற்றும் கலாச்சாரத் துறை ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் வனத்துறைச் செயலாளர் ராஜரத்தினம், தற்போது சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும்நிர்வாக இயக்குநராக மாறுகிறார். தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குநர் பதவிக்கு என்.வாசுதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், திருவாரூர் மாவட்ட ஆட்சியாளராக இருந்து, பிறகு "சும்மா" இருந்த சி. உமாசங்கர், இன்னும் "சும்மா"வேஇருக்கிறார். அவருக்கு இன்னும் பணியிடம் அறிவிக்கப்படவில்லை. முந்தைய அதிமுக ஆட்சியின்போது நடந்தசுடுகாட்டுக் கூரை ஊழலை திமுக ஆட்சியில் அம்பலப்படுத்தியவர்தான் உமாசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சுடச்சுட ஏராளமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர்."கட்டாயக் காத்திருப்பு" என்ற பெயரில் பல பேரை "சும்மா" இருக்கச் செய்தது தமிழக அரசு.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். நாளொரு டிரான்ஸ்பர், பொழுதொரு புதிய ஊர் என்று,இந்தப் போலீஸ் அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுவது பரிதாபமாக இருக்கிறது.

தற்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 2வது முறையாக டிரான்ஸ்பர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+