கண்மூடித்தனமாக அதிமுகவை ஆதரிக்க மாட்டோம்: நல்லகண்ணு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஆளும் கட்சியாக இருந்தாலும், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், கண்மூடித்தனமாக அதிமுகவை ஆதரிக்க மாட்டோம் எனஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் நல்லகண்ணு தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அதிமுக கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அதனைக் கண்மூடித்தனமாக ஆதரிக்க மாட்டோம். பல தவறுகளைச் சுட்டிக் காட்டிஅரசிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றியுள்ளோம். குறிப்பாக மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் மீண்டும்சாதிப் பெயரைச் சூட்டக் கூடாது என எடுத்துச் சொல்லி வலியுறுத்தினோம்.

இதனை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளார். உழவர் சந்தை மூடுவதை எதிர்த்தோம். இதனையும் ஏற்று செயல்படாத உழவர்சந்தைகளை மூடுவதாக ஒப்புக் கொண்டனர். இதன்படி உழவர் சந்தையும் தொடர்ந்து செயல்படும் வண்ணம்உருவாக்கியுள்ளோம்.

மக்கள் நலப் பணியார்களை நீக்கியது சரியே. அதே போல சாலைப் பணியார்களை நீக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளோம்.இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மூடப்பட்ட மில்களைத் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

தென்னக நதிகளை இணைக்க வேண்டும். மெட்ரிக் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை நிறுத்த வேண்டும் போன்றகோரிக்கைகளையும் எடுத்துக் கூறியுள்ளோம் என்றார் நல்லகண்ணு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+