சிங்கள போலீசாரால் தமிழ்ப்பெண் கற்பழிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சோதனைச் சாவடியில் தமிழ்ப்பெண் ஒருவரை சிங்கள போலீஸார் பலவந்தமாகக்கற்பழித்தனர்.

இது தொடர்பாக 3 போலீஸார் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு நகருக்குள் விடுதலைப்புலிகள் தற்கொலைப் படையினர் ஊடுருவி விடாமல் இருப்பதற்காக போலீஸார் பலநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக நகரின் முக்கியப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தன்று கொழும்பு நகருக்கு வந்த 28 வயது தமிழ்ப்பெண் ஒருவரை போலீஸார் சோதனை செய்வதற்காக தடுத்துநிறுத்தினர்.

பின்னர் அவரை அருகில் உள்ள சிறிய படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாகக் கற்பழித்தனர். இந்தச்சம்பவம் தொடர்பாக 3 சிங்கள போலீஸார் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடந்த போது சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சில ராணுவ வீரர்களைக் கைது செய்யவும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டிருப்பதாக மரதானா போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையின் மற்ற பகுதிகளில் இருந்து கொழும்பு நகருக்குள் வரும் அப்பாவி தமிழர்கள் சோதனை என்ற பெயரில் அப்பாவித்தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+