வீரப்பனை பிடிக்காமல் காட்டை விட்டு வரமாட்டோம்: தேவாரம்
சத்தியமங்கலம்:
இந்த முறை எப்படியும் வீரப்பனை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கேற்றார் போல் வனப்பகுதியில்வசிக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். வீரப்பனை பிடிக்காமல் காட்டை விட்டுவெளியே வரமாட்டோம் என வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள கூட்டு அதிரடிப்படையின் தலைவர் தேவாரம் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் தலைமையில் தமிழக, கர்நாடக போலீசார் வீரப்பனை தேடும் பணியில்ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக, கர்நாடக அதிரடிப்படைஅதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திங்கள் கிழமைசத்தியமங்கலத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக அதிரடிப்படை ஐ.ஜி. விஜயகுமார், கர்நாடக அதிரடிப்படை ஐ.ஜி. கெம்பையா, எல்லை பாதுகாப்பு படைதலைமை கமாண்டண்ட் கட்டியா, டி.ஐ.ஜி தமிழச்செல்வன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின் தேவாரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின் போது அவர் கூறுகையில், வீரப்பனைபிடிப்பதற்கான முதல் கட்ட தேடுதல் வேட்டையில் 20 குழுக்களாக பிரிந்து அதிரடிப்படையினர் இதுவரை 240 கிராமங்களில்20,00க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்துள்ளனர்.
வீரப்பனை பிடிக்க வேண்டும் என்ற உணர்வே மக்களிடமும் நிலவி வருகிறது. ஆனாலும் அவர்கள் எங்களிடம் சில குறைகளைதெரிவித்தனர்.
அவர்கள் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவர்கள் குறைகளை தீர்த்து வைக்க அதிரடிப்படை நடவடிக்கை எடுக்கும்.அந்த மக்களின் குறைகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
வீரப்பனை பிடிக்கும் விவகாரத்தில் தமிழக அதிரடிப்படைக்கும், கர்நாடக அதிரடிப்படைக்கும் இடையே எந்த விதமான கருத்துவேறுபாடும் இல்லை.
வீரப்பனை பிடிக்கும் பணியில் வனத்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீரப்பன் இருக்கும் இடம் தகவல் தெரிந்தால்அவர்கள் அதிரடிப்படையினரிடம் தெரிவிக்கலாம்.
வீரப்பனை பிடிக்கும் ஆபரேஷனுக்கு எந்தவிதமான காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. தற்போது வீரப்பனுடன் எத்தனைபேர் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை.
நடிகர் ராஜ்குமாரை மீட்க சென்ற மீட்பு படையினரிடம் விசாரணை செய்யப்படுமா என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.
வீரப்பனை பிடிக்கும்வரை நாங்கள் காட்டை விட்டு வெளியே வரமாட்டோம். தேவைப்பட்டால் கோவை வனப்பகுதியிலும்தேடுதல் வேட்டை நடத்துவோம்.
வீரப்பனை தேடும் ஆபரேஷனுக்கு, ஆபரேஷன் வீரப்பன் என்றுதான் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் சரணடைய முன் வரட்டும், அதன் பின் அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து யோசிக்கலாம் என்றார்.
எல்லையோர கர்நாடக போலீசார் திடீர் மாற்றம்
சத்தியமங்கல காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கர்நாடக பகுதிகளில் பணிபுரிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் திடீரெனமாற்றப்பட்டுள்ளனர்.
வீரப்பனை பிடிக்கும் பணியில் கர்நாடக போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்காக திறமையான போலீஸ் அதிகாரிகளைநியமிக்க கர்நாடக அதிரடிப்படை தலைவர் கெம்பையா முடிவு செய்துள்ளார்.
இதன்படி சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மைசூர், கொல்ளேகால், சாம்ராஜ்நகர் மற்றும் அதை சுற்றியுள்பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக மாண்டியா டி.எஸ்.பி.. தம்மையா சாம்ராஜ் நகருக்கும், கர்நாடக போலீஸ் அகாடமியில் பணியாற்றி வந்தடி.எஸ்.பி., உத்தப்பா கொள்ளேகால் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஏர்போர்ட் காவல்துறை இன்ஸ்பெக்டர் கெய்சர் அன்னூருக்கும், மண்டியா டவுன் இன்ஸ்பெக்டர் ஜெய்மாருதி சாம்ராஜ்நகர்ரூரலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications