கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை
கடலூர்:
கடலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக 4 பேரைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கடலூர் அருகே மேல்பூவணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் 35 வயதான கோவிந்தசாமி. இவர் அ.தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்து வந்தார்.
மேல்பூவணிக்குப்பத்தில், கோவிந்தசாமி உள்பட சுமார் 10 வீட்டுக்காரர்கள் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்றும்,மற்றவர்கள் அனைவரும் தி.மு.கவையும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பையும் சேர்ந்தவர்கள் என்றும்கூறப்படுகிறது.
அந்த ஊரில் சில பேர் சாராயம் விற்றதையும், சமீபத்திய கலவரங்களில் பஸ்களுக்குச் சேதம் ஏற்படுத்தியதையும்பற்றி கோவிந்தசாமி போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 27 பேர் கொண்ட கும்பல், கோவிந்தசாமியின் வீட்டுக்குள் புகுந்து, கோவிந்தசாமியைக்கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்து போனார்.
கத்திக் குத்தைத் தடுக்க முயன்ற கோவிந்தசாமியின் மனைவி லதா (30), அண்ணி சுமதி (24) மற்றும் முனியம்மாள்(50) ஆகியோரும் கத்திக் குத்துப் பட்டனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டுவருகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications