இளையராஜா மனைவியை கைது செய்ய உத்தரவு
சென்னை:
இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா கோர்ட் உத்தரவுப்படி கோர்ட்டில் ஆஜர் ஆகாததால்அவரைக் கைது செய்ய கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சென்னை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, தொழிலதிபர் நிர்மல் என்பவருக்கு ரூ. 9 லட்சம் தரவேண்டியதிருந்தது. இதுதொடர்பாக செக் ஒன்றை நிர்மலிடம் ஜீவா கொடுத்துள்ளார். ஆனால் அந்த செக் வங்கியில்பணம் இல்லாததால் திரும்பி விட்டது.
இதையடுத்து சென்னை எழும்பூர் 14-வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில், ஜீவா தன்னை மோசடி செய்து விட்டார்என்று கூறி நிர்மல் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோர்ட் ஜீவாவுக்குஉத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் கோர்ட்டில் ஆஜராகாத ஜீவா எழும்பூர் கோர்ட் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தொடர்ந்தார். அந்த மனுவில் எழும்பூர் கோர்ட் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
ஆனால் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகாத நிலையில் கைது உத்தரவை ரத்து செய்ய முடியாது எனவும் எழும்பூர்கோர்ட்டில் ஆஜராகுமாறும் 5 வாரக் காலக் கெடுவும் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
5 வாரம் முடிவடைந்த பின்னரும் ஜீவா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜீவாவை உடனடியாககோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சென்னை பாண்டிபஜார் போலீஸாருக்கு எழும்பூர் கோர்ட் பிடிவாரண்ட்பிறப்பித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications