காஷ்மீர் தான் பிரச்சனையே.. மற்றதெல்லாம் சும்மா!
இஸ்லாமாபாத்:
இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின் போது, காஷ்மீர்பிரச்சினை மட்டுமே பிரதானமாக இருக்கும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு முஷாரப் செல்லவிருப்பது பற்றி இஸ்லாமாபாத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்பேசும்போதுதான் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பரம வைரிகளாக இருந்த போதிலும், சில நாட்களுக்கு முன், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திடீரென்றுவாஜ்பாய் அழைத்தவுடன், உலகமே இன்ப அதிர்ச்சி அடைந்தது. முஷாரப் கூட கொஞ்சம் ஆடித்தான் போனார்.
முதலில் ஜூலை 9ம் தேதி இந்தியாவிற்கு வரப் போவதாக முஷாரப் கூறியிருந்தார். இருந்தாலும், முடிவாக ஜூலை14 முதல் 16 வரை அவர் இந்தியாவிற்குச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. வாஜ்பாயும் முஷாரப்பும்வரலாற்றுப் புகழ்பெற்ற ஆக்ராவில்தான் தங்களுடைய பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்காக முஷாரப் இந்தியா செல்கிறார் என்று தெரிய ஆரம்பித்ததிலிருந்தே, அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளும் மற்றும் பல முக்கிய கட்சிகளும் தொடர்ந்துமுஷாரப்பை வற்புறுத்திக் கொண்டே இருந்தன.
"இதோ, அதோ..." என்று முஷாரப்பும் இழுத்தடித்துக் கொண்டே வந்தார். இதற்கிடையே, நாட்டின் ஜனாதிபதிபதவியையும் ஏற்க வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்தது.
மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரைச் சந்திக்கப் போகும்போது, தான் சாதாரண ஒரு ராணுவஆட்சியாளராகப் போவதை அவர் விரும்பவில்லை. இதனால், அப்போது ஜனாதிபதியாக இருந்தவரை ராணுவமரியாதையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தன்னையே ஜனாதிபதியாகப் பிரகடனப் படுத்திக்கொண்டு,அந்தப் பதவியையும் ஏற்றுவிட்டார் முஷாரப்.
ஒருவழியாக புதன்கிழமை அவர் இஸ்லாமாபாத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். பாகிஸ்தானின்முக்கிய எதிர்க் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், வேறொரு கட்சியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தன. ஆனால் 19 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் ஆஜராகி இருந்தனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை எல்லாம் மறந்து, நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம் என்று சிலகட்சிகள் கூறின. தற்போது அரசியல்வாதியாகி இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்இம்ரான்கானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையுமே முஷாரப் சரிக்கட்டி விட்டார் என்றே தோன்றுகிறது. அனைத்துக்கட்சிகளுமே பேச்சுவார்த்தைக்கு "ஓ.கே." சொல்லி, முஷாரப்புக்கு "குட் லக்"கும் தெரிவித்து விட்டன.
எனவே, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தைக்குப் புதிய தெம்புடன் கிளம்பத்தயாராகி வருகிறார் முஷாரப்.
ஆனால், காஷ்மீர் பிரச்சனையில் தனது நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என இந்தியா அடித்துச்சொல்லிவிட்டது. அப்படியே பேசினாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரை மீட்பது குறித்துமட்டுமே பேசுவோம் என திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications