சன் டிவி. நிருபர் கைது: சென்னையில் நிருபர்கள் போராட்டம்
சென்னை:
சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து முதல்வரிடம் மனு கொடுக்கமுயன்ற பத்திரிகையாளர்கள் போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
விழுப்புரம் அரிசிக் கிட்டங்கியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி திடீர் என நுழைந்து புழுத்த அரிசி இருக்கிறதாஎன்ற சோதனையில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியின்போது அவருடன் பல செய்தியாளர்களும்,புகைப்படக்காரர்களும் சென்றிருந்தனர். அவர்களில் சன் டிவி நிருபர் சுரேஷும் ஒருவர்.
இந் நிகழ்ச்சியையடுத்து பொன்முடி கைது செய்யப்பட்டார். அவருடன் சில திமுக பிரமுகர்களும் கைதுசெய்யப்பட்டனர். இந் நிலையில் சன் டிவி நிருபர் சுரேஷும் திடீரென கைது செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து பல பகுதிகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சென்னை கோட்டையில் முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்து மனுக் கொடுக்க சென்னை பத்திரிக்கை நிருபர்கள் முடிவு செய்தனர். இதற்காககாலையில் கோட்டைக்கு மனுவுடன் வந்தனர்.
ஆனால் முதல்வர் அவர்களது தீர்மானத்தைப் பெறத் தயாராக இல்லை என்று போலீஸால் மூலம்தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோரிக்கை மனுக் கொடுக்காமல் போக மாட்டோம் என பத்திரிக்கையாளர்கள்சார்பில் தீர்மானம் போடப்பட்டு முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் கார் வெளியேறும் பாதையில் செய்தியாளர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் போலீஸார்அதிக அளவில் குவிக்கப்பட்டு செய்தியாளர்களைக் கலையச் சொல்லி உத்தரவிட்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த பத்திரிக்கையாளர்கள் முதல்வரைப் பார்க்காமல் போக மாட்டோம் எனத்திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந் நிலையில் முதல்வர் கோட்டையிலிருந்து வெளியேறுவதற்காக கார் மூலம்வெளியே வந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுவைக் கொடுக்க முயன்றனர். ஆனால்போலீஸார் அவர்களைத் தடுத்து அங்கிருந்து தள்ளினர். இதில் சில பத்திரிகையாளர்கள் கீழே விழுந்தனர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் வெளியில் ஓடினர். கோட்டை வாசல் அருகே சாலையில் கூடிய அவர்கள்போலீஸ் பட்ரோல் வேன்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உதவி கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையிலானபோலீஸார் செய்தியாளர்களைச் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையே முதல்வர் மற்றும் போலீஸ் கார்களைத் தடுத்த செய்தியாளர்களை போலீஸார் அங்கிருந்துகடுமையாகத் தள்ளி அப்புறப்படுத்தினர். இதில் சில பெண் செய்தியாளர்கள் கீழே விழுந்தனர்.
முதல்வரைச் சந்திக்க விடாமல் தங்களை போலீஸார் தடுப்பதாக கூறி சாலையில் அமர்ந்து செய்தியாளர்கள் மறியல்செய்தனர். சைலேந்திர பாபுவிடம் கடுமையாக வாதாடினர்.
செய்தியாளர்களின் இந்தப் போராட்டம் காரணமாக தலைமைச் செயலக சாலையில் சுமார் 1 மணி நேரம்பதட்டமாக இருந்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications