புலிகள் மீதான தடையை நீக்கக் கோரவில்லை: யு.என்.பி.
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சிதெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியான எங்கள் ஐக்கிய தேசிய கட்சியைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பார்க்கிறது சந்திரிகா அரசுஎன்றும் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் இலங்கையில் ஆளும்கட்சியான அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது.
இதையடுத்து, சந்திரிகா அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது. இதே நாள் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேநாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக, அதிபர் சந்திரிகாவும், எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது ரனில் விக்ரமசிங்கே, அதிபர் சந்திரிகாவிடம், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கும்படிக் கூறியதாகபத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.
ஆனால் இந்த செய்திக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி செய்தித்தொடர்பாளர் கருணசேனா கொடித்துவக்கு மறுப்புதெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அதிபர் சந்திரிகாவும், ரனில் விக்ரமசிங்கேவும் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்தும்,அமைதி ஏற்படுத்துவது குறித்தும் மட்டுமே பேசிக் கொண்டார்கள்.
ரனில் விக்ரமசிங்கே, இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். ஆனால்அரசோ ஆதாயம் தேடும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியைக் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்ததும், புலிகள் மீதான தடையை நீக்குவதாக தமிழர் கட்சியான தமிழர் ஈழவிடுதலை முன்னணி அமைப்பு எம்.பி.யிடம் (டெலோ) உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் பத்திரிக்கைகளில் செய்திவெளியாகியுள்ளது. இதுவும் தவறான செய்தியாகும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications