குடிநீர் பற்றாக்குறைக்கு கருணாநிதிதான் காரணம்: ஜெ.
சென்னை:
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட கருணாநிதிதான் காரணம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னைக்கு கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு சம்மதித்துள்ள ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடுவுக்கு நான் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டுக்கு கருணாநிதிதான் காரணம். 1991 முதல் 1996வரைநாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதே போல் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. அதை தவிர்க்க பல திட்டங்களைசெயல்படுத்த ஆவண செய்தோம்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் முதல்வராக இருந்த கருணாநிதி தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க எந்த விதமானநடவடிக்கையும் எடுக்கவில்லை.
எத்தனை முறை ஆந்திரா சென்றார் கருணாநிதி?
தண்ணீர் கேட்பதற்காக ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடுவை நான் நேரில் சென்று சந்திக்க வேண்டும் எனகருணாநதி கூறுகிறார். அவர் முதல்வராக இருந்த போது எத்தனை முறை சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்? குடிநீர்பிரச்சனையை தீர்க்க அவர் ஒரு முறை கூட சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவில்லை.
இப்போது நான் நேரில் சென்று ஆந்திர முதல்வருடன் பேச வேண்டும் என கூற கருணாநிதிக்கு எந்த தகுதியும்கிடையாது. நான் முத்லவராக இருந்த போது 3 முறை ஐதராபாத் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்.அவரிடம் தண்ணீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளேன்.
நான் முதல்வராக இருந்த போது கிருஷ்ணா நீரை கொண்டு வர பல திட்டங்கள் தீட்டினேன். இந்த திட்டங்கள்நிறைவேற தாமதமானதால், குடிநீர் பிரச்சனையை தீர்க்க புதிய வீராணம் திட்டம் தீட்டினேன். அதை நிறைவேற்றஉலகவங்கி ரூ.1,638 கோடி கொடுக்க சம்மதித்தது.
ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றும் முன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்றகருணாநிதி இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
மக்களை ஏமாற்றினார் கருணாநிதி. ஸ்டாலினை மேயராக்குவதற்காக, கிருஷ்ணா நதிநீர் கொண்டு வருவதற்கானபணி முடிவடைந்துவிட்டதாகக் கூறி, விழா எடுத்து நாடகமாடினார். இன்றுவரை கிருஷ்ணா நதிநீர் சென்னைக்குவரவில்லை.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications