கல்லூரிகளில் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் சீட்களைக் குறைக்க தமிழக அரசு முடிவு
சென்னை:
தமிழகக் கல்லூரிகளில் சாப்ட்வேர் இஞ்சினியர் படிப்புக்கான இடங்களைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில ஆண்டுகளில் சிவில், மெக்கானிகல் இஞ்சினியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றநிலை உருவாக இருப்பதையடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
சமீப காலங்களில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாப்ட்வேர் சம்பந்தமான கம்ப்யூட்டர் படிப்புகளுக்குத்தான்அதிக மதிப்பு உள்ளது. பிளஸ் டூ முடித்து விட்டு வரும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலான பேர், இதுபோன்றகம்ப்யூட்டர் படிப்புகளில் தான் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
இதையடுத்து அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்களைஅரசு தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆண்டுக்கு ஆண்டு கம்ப்யூட்டர் படிப்புகளுக்கான சீட்டுகளின்எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. இதற்கான கட்டணங்களும் தாறுமாறாக உள்ளன.
பிள்ளைகள் கம்ப்யூட்டர் படிப்பு படித்து, நிறையச் சம்பாதித்துக் கொடுத்து விடுவார்கள் என்ற ஒரு பெருத்தநம்பிக்கையில், கடன் வாங்கிக் கூட இந்தக் கம்ப்யூட்டர் படிப்பில் சேர்த்து விடுகின்றனர்.
இதன் விளைவாக, சிவில் மற்றும் மெக்கானிகல் இஞ்சினியர்களுக்கு மட்டுமல்ல இது சம்பந்தமானபடிப்புகளுக்கும்கூட, கடந்த 10 ஆண்டுகளுக்க முன்னர் இருந்த மதிப்பு இப்போது இல்லாமல் போய்விட்டது.கல்லூரிகளில் கூப்பிட்டுக் கூப்பிட்டு இந்தப் படிப்புகளுக்கான சீட்டுகளைக் கொடுக்கிறார்கள்.
அப்படிக் கொடுத்தாலும், சிவில், மெக்கானிகல் இஞ்சினியரிங் வகுப்புகள் காற்றாடுகின்றன. இந்த நிலை இன்னும்சில ஆண்டுகள் தொடர்ந்தால், சிவில், மெக்கானிகல் இன்ஜினியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என அரசுகருதுகிறது.
இதையடுத்து, கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படிப்புக்கான சீட்டுகளை விட, சிவில் மற்றும் மெக்கானிகல்இஞ்சினியரிங் படிப்புக்கான சீட்டுக்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறாமல், கம்ப்யூட்டர் இஞ்சினியரிங்படிப்புக்கான சீட்டுக்களைக் குறைக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவிடம் தமிழகஅரசு வற்புறுத்தியுள்ளது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications