தனி நீதிமன்றங்களுக்கு ஆன செலவு ரூ.3 கோடி
சென்னை:
கடந்த 4 ஆண்டுகளில் தனி நீதிமன்றங்களுக்காக ஆன செலவு .3 கோடியைத் தாண்டியுள்ளது.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா அரசு செய்த ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நீதிமன்றங்களின் ஆயுள்காலம் வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஜெயலலிதா மீண்டும் தமிழகமுதல்வராகியுள்ளார். இதனால் தனி நீதிமன்றங்கள் நிலை என்னவாகும் என்று அனைவருடைய மனதிலும் கேள்வி எழுந்தது.
ஆனால், தனி நீதிமன்றங்களின் ஆயுள்காலத்தை நீட்டிக்குமாறு உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.இதைத் தொடர்ந்து, தநி நீதிமன்றங்களின் ஆயுள்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர்ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து, தனி நீதிமன்றங்களுக்காக கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மட்டும் எவ்வளவு செலவானது என்று கேட்டு தமிழகஅரசு உயர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தது. உடனடியாக சிவில் நீதிமன்றத்தை நாடிய உயர் நீதிமன்றம், தனிநீதிமன்றங்களுக்கான செலவுக் கணக்கைப் பெற்று, தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், இந்த தனி நீதிமன்றங்களுக்காக ரூ.3.03 கோடி செலவாகியுள்ளது என்று அந்தக் கணக்குதெரிவிக்கிறது.
பல்வேறு குற்றப் பத்திரிக்கைகளைத் தமிழில் மொழிபெயர்த்து நகல் எடுத்ததற்காக ரூ.36 லட்சமும், சாட்சிகளுக்கு "பேட்டா"வழங்கியது தொடர்பாக ரூ.1.5 லட்சமும் செலவாகியிருப்பதாகவும் அந்தக் கணக்கு விவரம் கூறுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications