முகலாய மசூதிக்கு வர முஷாரப்புக்கு அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அடுத்த மாதம் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் இந்தியா வரும்போது, டெல்லியிலுள்ள பதேபூர் மசூதிக்கு வருமாறுஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஜூலை 14ம் தேதி இந்தியா வரவிருக்கும் முஷாரப், வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த மசூதிக்கு வருகைதர வேண்டும் என்று ஒரு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் அகமது.

இந்திய தலைநகர் டெல்லியின் முக்கியமான பகுதியில் இருக்கும் இந்தப் பழமையான மசூதி, 17ம் நூற்றாண்டில் முகலாயமன்னர்களால் கட்டப்பட்டது.

இது குறித்து அகமது கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் முஷாரப்பின் முன்னோர்கள் டெல்லியில்இருந்தபோது, இந்த மசூதிக்கு அடிக்கடி வந்து தொழுகை நடத்துவார்கள். அதனால் முஷாரப்பும் இந்த மசூதிக்கு வந்து சிறப்பிக்கவேண்டும் என முஷாரப்பை கேட்டுக் கொண்டுள்ளோம்.

முஷாரப் பிறந்த இடத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மசூதி அமைந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான்பிரிவினைக்குப் பின், முஷாரப் தனது பெற்றோருடன் பாகிஸ்தான் சென்றுவிட்டார். அதன் பின் 50 ஆண்டுகளாக அவர்இந்தியாவிற்கே வரவில்லை.

இந்நிலையில், அடுத்த மாதம் அவர் இந்தியா வரவிருப்பதால், அவரை இந்த பழமையான மசூதிக்கு வருமாறும்அழைத்துள்ளோம்.

தற்போது பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் அப்துல் சத்தார், இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதராகஇருந்த போது இந்த மசூதிக்கு அடிக்கடி வந்து தொழுகை நடத்துவார்.

வாஜ்பாய்-முஷாரப் பேச்சுவார்த்தை வெற்றி பெறவேண்டும் என நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் 2நாடுகளிலும் அமைதி நிலவும் என நம்புகிறோம் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+