வீரப்பனிடமிருந்து கேஸட் வந்ததா?
பெங்களூர்:
வீரப்பனிடம் இருந்து எங்களுக்கு எந்த கேஸட்டும் வரவில்லை என்று கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேதெரிவித்தார்.
பொதுமன்னிப்பு அளித்தால், தான் சரணடையத் தயாராக இருப்பதாக வீரப்பன் அனுப்பியதாகக் கூறப்படும் எந்தக் கேஸட்டும்எங்களுக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கார்கே வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
வீரப்பன் அனுப்பியதாகக் கூறப்படும் எந்தக் கேஸட்டும் கர்நாடக அரசுக்கு இதுவரை வந்து சேரவில்லை. இது வெறும் வதந்தியே.
வீரப்பனைப் பிடிப்பதற்காக கர்நாடக, தமிழக கூட்டு அதிரடிப்படை போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காட்டுக்குள்சென்று வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை பெரும்பாலான பத்திரிக்கைகளில், பொதுமன்னிப்பு அளித்தால் வீரப்பன் சரணடையவிரும்புவதாகவும், இதுதொடர்பாக தமிழக-கர்நாடக மாநில அரசுகளுக்கு கேஸட் அனுப்பியுள்ளதாகவும் செய்திவெளியாகியிருந்தது. இந்தக் கேஸட் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் மூலமாக வந்ததாகவும்தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கூட்டு அதிரடிப்படை போலீஸார் மலைவாழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தத் தாக்குதலைத் தடுத்துநிறுத்துவதற்காகத்தான் நான் பொதுமன்னிப்பு பெற்று சரணடைய விரும்புகிறேன் என்று கேஸட்டில் வீரப்பன் பேசியிருந்ததாகவும்பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications