இந்திய அமைதித் தூதர் விடுவிக்கப்படுவார்: பாக்.உறுதி
இஸ்லாமாபாத்:
அமைதி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சைக்கிள் மூலம் விசா இல்லாமல் பாகிஸ்தான் சென்றதால் அங்குள்ள சிறையில்அடைக்கப்பட்ட இந்திய அமைதித் தூதர் விடுவிக்கப்படுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாகிஸ்தான் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உலகம் முழுவதும் அமைதி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்திய அமைதித் தூதர் விகாஸ் சிங் சைக்கிள் மூலம் பலநாடுகளுக்குச் சென்றார். இவர் விசா இல்லாமல் பாகிஸ்தானில் நுழைந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு பெஷாவர் சிறையில்அடைக்கப்பட்டார்.
அடுத்த மாதம் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் இந்தியா செல்வதால், இவரை விடுவிப்பதற்கு முயற்சி எடுப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கை விடுவிப்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இன்னும் சில தினங்களில் அவர்விடுவிக்கப்படுவார் என்று நம்பலாம். இவரை விரைவில் விடுவிக்கும்படி இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.
இந்திய அதிகாரிகள் கூறுகையில், பாகில்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள், சிங் விரைவில் விடுவிக்கப்பட்டு விடுவார் என்றுஉறுதியளித்துள்ளனர். முஷாரப்பின் இந்திய வருகையின்போது, சிங் விடுவிக்கப்படலாம் என்றனர்.
முன்னதாக, தனது அமைதி பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக 1987 ம் ஆண்டு சைக்கிளில் புறப்பட்டார் சிங். முதலில்வங்கதேசத்திலிருந்து தனது அமைதிப் பயணத்தைத் தொடங்கினார். அப்போதிலிருந்து இவரது பெற்றோர்கள் இவரைப்பார்க்கவில்லை. சுமார் 25 ஆண்டுகளில் அமைதி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுவிட்டுத் திரும்பி விடுவேன் என்று சிங் தனதுபெற்றோர்களிடம் கூறிச்சென்றார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விசா இல்லாமல் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது தொடர்பாக, இவர் கடந்த மே 31 ம் தேதி பெஷாவர்சிறையில் அடைக்கப்பட்டார். பெஷாவர் நீதிமன்றம் இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சிங், கடந்த 14 ஆண்டுகளில் சுமார் 62 நாடுகளுக்கு சைக்கிள் மூலம் சென்றுஅமைதிப் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications