சன் - ஜெயா TV
சென்னை:
சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையே புதிய போர் தொடங்கியுள்ளது.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் எம்.எல்.ஏவுமான பொன்முடி அரிசிக் கிட்டங்கியில் திடீர் சோதனைமேற்கொண்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக பொன்முடி மற்றும் சில திமுகவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் சன் டிவி நிருபர் சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்திருந்தும் சன் டிவி நிருபரை மட்டும் கைது செய்ததுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவி நிர்வாகம் தனது நிருபரைக் கைது செய்ததைதக் கண்டித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஊழியர்கள் கருப்புபட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும், வியாழக்கிழமை சன் டிவியில் ஒரு செய்தி ஒளிபரப்பானது. அதில், விழுப்புரம் சன் டிவி நிருபரை மட்டும் கைதுசெய்துள்ள தமிழக அரசின் ஜனநாயக படுகொலைக்கு முதல்வரிடம் உங்களது கண்டனத்தைத் தெரிவியுங்கள் என்று கூறிஜெயலலிதாவின் தொலைபேசி எண்களைக் கொடுத்தனர்.
இதற்கு ஜெயா டிவி தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை முதல் ஜெயா டிவியில் கருணாநிதியின்தொலைபேசி எண்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில், பொதுமக்களே உங்கள் பகுதிக்கு கிருஷ்ணா நீர் வந்து விட்டதா?இல்லையென்றால் அப்படிக் கூறிய முன்னாள் தலமைச்சர் திரு.கருணாநிதியிடம் தொடர்பு கொண்டு கேளுங்கள் என்று கூறிகருணாநிதியின் 3 தொலைபேசி எண்களை கொடுத்துள்ளனர்.
சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையிலான இந்த போன் போர் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications