சென்னையில் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க ஜெ.ஆலோசனை
சென்னை:
சென்னை நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க என்னென்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்துமுதல்வர் ஜெயலலிதா தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை நகரில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் சப்ளை செய்யும் ஏரிகளெல்லாம் வறண்டுவிட்டநிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் பேசி கிருஷ்ணாநதிநீரை சென்னைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஆந்திராவில் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 190 கன அடி நீரைத்திறந்து விட சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்தார்.
முன்னதாக, நெய்வேலியில் இருந்து 500 க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமும், ஈரோட்டிலிருந்து ரயில்கள் மூலமும்தினந்தோறும் சென்னைக்குத் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிகளை முதல்வர் ஜெயலலிதா ஆய்வுசெய்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சி. துரைராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைசெயலாளர் மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தற்போது லாரி, ரயில்கள் மூலமாக வரும் நீரின் அளவு, கிருஷ்ணா நதி நீரின் அளவு ஆகியவை குறித்துஆலோசனை நடத்தினார். இவை தவிர மேலும் எந்தெந்த வழிகளிலெல்லாம் தண்ணீர் கொண்டு வரசாத்தியக்கூறுகள் உள்ளன என்று தீவிரமாக ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை நகர மக்களின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையைச் சுற்றிலும் எங்கெங்கு நிலத்தடி நீர் எடுக்க முடியுமோ அங்கெல்லாம் இருந்து உடனடியாகத் தண்ணீர்எடுத்து வரவும் நடவடிக்கை எடுக்கும்படி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications