சென்னை மத்திய சிறையில் கருணாநிதி
இதனால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என தி.மு.க. பிரச்சாரம்செய்துவந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாஆண்டிப்பட்டியிலும், கிருஷ்ணகிரியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாளன்று ஜெயலலிதா சார்பில் மேலும் 2தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட.து. ஏற்கனவே ஊழல் வழக்கில்குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை வழங்கியதால் அவர் தேர்தலில் நிற்பதுகேள்விக்குறியாக இருந்தது.
2 தொகுதிகளுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டால்அவர்கள் தேரத்தலில் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல்ஆணைய சட்டம் கூறுகிறது.
வேட்புமனுக்கள் பரிசீல ன செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள்தள்ளுபடி செய்யப்பட்டன. அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமைஏற்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்துவந்தார் ஜெயலலிதா.
தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என தி.மு.க.கூறிவந்தது.
ஆனால் எம்.எல்.ஏக்களால் ஒருமனதாக ஜெயலலிதாவை சட்டசபை தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டதால் அவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்ஆளுனர் பாத்திமா பீவி.
பதவி ஏற்றபின் ஜெயலலிதா கூறுகையில், யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைஎடுக்கமாட்டோம். ஆனால் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனகூறினார்.
முதலில் தேர்தல் சமயத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக முன்னாள் சட்டசபை துணைசபாநாயகரும், எம்.எல்.ஏவுமான பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டார்.
தி.மு.க, புழுத்த அரிசி வாங்கி வைத்துள்ளது. இதில் ரூ 65 கோடிவரை ஊழல்நடந்துள்ளது என குற்றம் சாட்டியது அ.தி.மு.க அரசு.
சிறையிலிருந்த முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தட்டார்கள் என கருணாநிதி, முன்னாள்டி.ஜி.பி., உள்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சிறைத்துறை அதிகாரிகள்ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
அரசு குடோனில் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்தும், கொலை மிரட்டல்வழக்கிலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சென்ற செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்.
புதன்கிழமை சன் டிவி நிருபர் சுரேஷ் என்பவர் கொலை மிரட்டல் வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகிளம்பியது.
அவர்கள் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரைதொடர்ந்தது.
வெள்ளிக்கிழமை காலை பேராட்டத்தில் ஈடுபட்ட நிருபர்கள் 150 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
சன் டிவி நிருபர் சுரேஷும், பொன்முடியும் நிபந்தனை ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.
தி.மு.க. தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது பழிவாங்கும் நடவடிக்கை எனகுற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கருணாநிதி அவரதுஇல்லத்தில் கைது செய்யப்பட்டார், சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல்செய்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அடுத்தமாதம் 10ம் தேதிவரையில் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
கருணாநிதி கைது செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications