கருணாநிதி கைது செய்யப்பட்டது துயரமானது: அத்வானி
டெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது மிகவும் துயரமான சம்பவமாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி கூறியுள்ளார்.
தற்போது துருக்கியில் இருக்கும் அத்வானி கருணாநிதி கைது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அத்வானியின் கருத்து குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டது ஜனநாயகத்தை மீறிய செயலாகும். தனிப்பட்ட விரோதம்காரணமாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஒரு போதும் இறங்கக் கூடாது.
போலீஸார் கருணாநிதியைக் கைது செய்யும்போது அவரது வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுசெயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் துருக்கியிலிருந்து அத்வானி தொலைபேசி மூலம் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் ஆகியோரிடமும் பேசினார் என்றும் கூறினார்.
முன்னதாக முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி (78) தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது எழுப்பப்பட்டு போலீஸாரால்அடித்து, இழுத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பால்தாக்கரே கண்டனம்:
சிவசேனை தலைவர் பால்தாக்கரே கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவர் கூறுகையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்தச்சம்பவம் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது.
அவரைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் அவரது வயதுக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும். அவர் முன்னாள் முதல்வர்என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உதாரணமான சம்பவமாகும் இது. கருணாநிதி கைது செய்து இழுத்துச்செல்லப்பட்டதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். இது மிகவும் மோசமான செயலாகும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ், யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications