கதறி அழுத குடும்பத்தினர்
5 ஆண்டு காலம் கழித்து 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.மீண்டும் கருணாநிதி தமிழக முதல்வராக பதவி ஏற்று 2001ம் ஆண்டு வரை தமிழகமுதல்வராக பதவி வகித்தார்.
2001ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது.
ஜெயலலிதா 1991-96வரை முதல்வராக இருந்த போது நடைபெற்ற ஊழல்வழ்ககுகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்தார் கருணாநிதி. 3 வழக்குகளில்ஜெயலலிதா தண்டனை பெற்றார். சில வழக்குகளில் விடுதலையானார்.
ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகு கருணாநிதி மீது பழிவாங்கும் நடவடிக்கையில்ஈடுபடுவார் என பலரும் கருதினர். ஆனால் யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கைஎதுவும் எடுக்கப்படமாட்டாது. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்என ஜெயலலிதா கூறினார்.
ஆனால் அ.தி.மு.க பதவி ஏற்றது முதலே பல தி.மு.க. தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர். இதன் உச்சகட்டமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமைநள்ளிரவு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அப்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது பல தலைவர்களின்கண்டனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. முது பெரும் அரசியல் தலைவரிடம் போலீசார்மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதைப் பார்த்த பொதுமக்கள்அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆழ்ந்த துக்கத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
கடவுள் நம்பிக்கையே இல்லாத கருணாநிதி கூட சிறைவாசலில் நிருபர்களைப் பார்த்துஇறைவன் நீதியை கொடுப்பார் எனக் கூறிவிட்டுத் தான் சிறைக்குள் சென்றார்.
தமிழகத்தில் எஞ்சி இருக்கும் மிக மூத்த தமிழ்த் தலைவர்களில் கருணாநிதி தான்முதன்மையானவர். இலக்கியம், நாடகம், கவிதை, ஆட்சி, அரசு, சினிமா, பட்டிமன்றம்,பாடல்கள் என அவர் தொடாத துறைகளே கிடையாது.
இந்த வயதிலும் கூட சாப்ட்வேர் குறித்து அறிந்து கொண்டு அதற்குத் தேவையானகட்டமைப்பை தமிழகத்தில் உருவாக்கிக் காட்டினார்.
இப்போதும் கூட இளைஞர்களுக்கு உரிய உற்சாகத்தோடு பேசவும் எழுதவும்கூடியவர்.
லேட்டஸ்ட் சினிமா வரைக்கும் கூட பார்த்துவிட்ட விமர்சனம் செய்யும் திறமைஉள்ளவர்.
மிக மூத்த தமிழ் தலைவர் நடத்தப்பட்ட விதம் தமிழக காவல்துறையின் மீது அழியாதகரையை ஏற்படுத்திவிட்டது தான் உண்மை.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications