முன்னாள் தலைமைச் செயலர் நம்பியாரும் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கே.என். நம்பியார் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரைஅடித்து, இழுத்துச் சென்றனர். கருணாநிதி தற்போது சென்ட்ரல் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரான் கே.என். நம்பியாரும் போலீஸாரால் சனிக்கிழமைகாலை கைது செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கும் போலீஸார் சென்று சோதனையிட்டனர். ஆனால்ஸ்டாலின் அங்கு இல்லாததால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவருடைய வீட்டைச் சுற்றிலும்போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின் வீட்டைச் சுற்றிலும் திமுக தொண்டர்களும் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications